தவெக தொடர்ந்து முன்னிலை.. விஜய் வீட்டில் நடிகை த்ரிஷா!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றுள்ள நிலையில், விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார். தேர்தல் முடிவுகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், விஜயின் நீலாங்கரை இல்லத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ரசிகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

த்ரிஷா வருகை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஒரு மணி நிலவரப்படி 110 இடங்களில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது. அதன் வெற்றியை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகை திரிஷா, விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு வந்துள்ளார்.

Vijay Trisha Neelankarai
Photo Credit:

நேரடி போட்டி: தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகாவிற்கும் தான் நேரடி போட்டி என பல இடங்களில் பிரச்சாரம் செய்து நேரடியாக முக ஸ்டாலினை எதிர்த்து வந்தார். இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒரு மணி நிலவரப்படி 110 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. அதேபோல் திமுக 61 தொகுதிகளிலும், அதிமுக 61 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

திருப்பதியில் சாமி தரிசனம்: இந்நிலையில் நடிகை திரிஷா, விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி நேற்று திருப்பதிக்கு காரில் சென்ற அவர், இன்று அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து நேரடியாக விஜய்யை சந்திக்க நீலாங்கரை இல்லத்திற்கு வந்துள்ளார். ஏற்கனவே விஜய், திரிஷா குறித்து சர்ச்சை இருக்கும் நிலையில் த்ரிஷாவின் வருகை மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X