மனசுக்குள்ளே காதல் வந்துச்சா.. காதல் குறித்து த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. 40 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை த்ரிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் காதல் குறித்த பதிவினை ஷேர் செய்துள்ளார்.

நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரைக்கும் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். த்ரிஷா பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்று அனைவரும் சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில், வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். அந்த படத்தை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பிறகு, விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார்.

trisha krishnan instagram

நடிகை த்ரிஷா: அதன்பின், அஜித்துடன் விடாமுயற்சி, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா, மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக்லைஃப், மோகன் லாலுடன் இணைந்து ராம் என அடுத்தடுத்து த்ரிஷா மீண்டும் ஒரு ரவுண்டு வரும் த்ரிஷா, விஜய்க்காக கோட் படத்தில் மட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார். அந்த பாடலில் மஞ்சள் புடவையில் இவர் ஆடிய ஆட்டம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

மனசுக்குள்ளே காதல் வந்துச்சா: இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காதல் குறித்து ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார்.அதில், வாழ்வில் ஒரு முறை மட்டும் வரும் உண்மை காதல் என்னவென்றால், ஒருவர் உங்களை உண்மையானவராக இருக்க விடுவதும், உங்களது புதிய பரிமாணங்களை ஏற்றுக்கொள்வதும்தான் என்று குறிப்பிட்டு, Evil Eye இமோஜியையும் பதிவிட்டுள்ளார். இந்த இமோஜி பிறர் கண்படக்கூடாது என்பதற்கான வைக்கப்படும் இமோஜியாகும். இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள், அடடா அம்மணிக்கு காதல் வந்துவிட்டது போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

trisha krishnan instagram

நின்று போன திருமணம்: நடிகை த்ரிஷாவிற்கு 2015ஆம் ஆண்டு வருண் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற இருந்தது. திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்று போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியானது. ஆனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு,ன அது இருவரின் உறவில் விரிசலாக மாறியதை அடுத்து, திருமணம் நின்று போனது. அதன் பிறகு த்ரிஷா திருமணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். மேலும்,திருமணம் குறித்து பேட்டி அளித்த த்ரிஷா, திருமணம் குறித்த அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்றும், தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாகவே இல்லாததால், திருமணம் குறித்த பயம் தனக்கு வருவதாக கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X