Trisha :ஏன் திருமணம் செய்துக்கலை.. மனம் திறந்த பியூட்டி குயின் த்ரிஷா!

சென்னை : நடிகை த்ரிஷா அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்த நிலையில் குந்தவை என்ற அழுத்தமான கேரக்டரில் நடித்து ரகிர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

Actress Trisha opens up about her marriage controversies

தொடர்ந்து தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் நடித்து வருகிறார்.

திருமண சர்ச்சைகள் குறித்து பேசிய த்ரிஷா : நடிகை த்ரிஷா தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 படம் அவருக்கு சிறப்பான ரீ என்ட்ரியை கொடுத்தது. இந்தப் படத்தில் கைநழுவிப் போன காதலை மீண்டும் சந்திக்கும்போது ஏற்படும் அனுபவங்களை கதைக்களமாக இயக்குநர் கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரும் கவிதையான நடிப்பை கொடுத்திருந்தனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் ராங்கி உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியானது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தில் குந்தவை என்ற அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார் த்ரிஷா. படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சமீபத்தில் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியானது.

அடுத்ததாக நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவாகிவரும் லியோ படத்திலும் த்ரிஷா இணைந்துள்ளார். இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் அவர் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சமீபத்தில் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், அங்கு தனியாகவும் படக்குழுவினருடனும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை த்ரிஷா சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

அவர் போகும் இடங்களில் எல்லாம் அவரிடம் ரசிகர்கள் லியோ படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன்களில் அதிகளவில் த்ரிஷா பங்கேற்ற நிலையில், லியோ படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்தனர். அதற்கு நாசுக்காக பதிலளித்திருந்தார் த்ரிஷா. படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் விரைவில் படத்தின் ப்ரமோஷன்களில் சந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் கேள்விகளை தொடர்ந்து த்ரிஷா அதிகமாக ரசிகர்களிடம் எதிர்கொண்ட கேள்வி என்றால் அது அவரது திருமணம் குறித்துதான். இதுகுறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் திருமணம் என்பது 30 வயதிற்குள் செய்துக் கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்ற கான்செப்டே தவறானது என்று கூறியுள்ளார். மனிதர்களுக்கு 30 வயதிற்கு மேல்தான் வாழ்க்கை குறித்த தெளிவு ஏற்படுவதாகவும் அதன்பிறகு தனக்கான துணையை தேடிக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Actress Trisha opens up about her marriage controversies

தான் திருமண வாழ்க்கை சரியாக அமையாத பல நபர்களை பார்த்துள்ளதாகவும் தன்னுடைய நண்பர்களே, திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை என்றும் கூறியுள்ள த்ரிஷா, தனது வாழ்க்கைக்கு அனைத்து விதத்திலும் சரியாக அமையும் நபரை சந்தித்தால் கண்டிப்பாக தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் த்ரிஷா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா, இந்த வயதிலும் மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X