Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
“சந்திரமுகி 2“ நோ சொன்ன ஜோதிகா…சந்திரமுகியாக நடிப்பது யார் தெரியுமா ?
சென்னை : ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
மலையாள திரைப்படமான "மணுசித்ரதாழ்" திரைப்படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி. இப்படம் 2005ம்ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வித்தியாசாகர் இசையில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்தது.
இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த்,பிரபு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, நாசர் மற்றும் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தார்கள்.
அஜித், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி தான் செட் ஆவாங்க – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
சந்திரமுகி 2
திரையரங்கில் 700 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து, சந்திரமுகி 2வது பாகத்தில் ரஜினிகாந்தின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க உள்ளார்.
நடிகர் வடிவேலு இணைந்தார்
சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும், நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார். முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தினை தயாரிக்க இருந்த வெளியான நிலையில், லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு
சந்திரமுகி 2 குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் , சந்திரமுகியாக நடித்த ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கக்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏன் என்றால் சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் குறிப்பா கிளைமாக்ஸில் வரும் ரா.. ரா..சரசுக்கு ரா.. ரா.. என்ற பாடலில் பின்னிபிடல் எடுத்திருப்பார். உண்மையில் பேய் பிடித்து ஆடுவது போல அவரின் சிரிப்பும், கர்ஜனையும் வேறவெலவில் இருக்கும்.
சந்திரமுகி த்ரிஷா ?
இந்த முக்கியமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த்ரிஷா ஏற்கனவே அரண்மனை, மோகினி போன்ற திரைப்படங்களில் பேய் வேடத்தில் நடித்துள்ளதால், இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் த்ரிஷாவை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன்
நடிகை த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30ந் தேதி வெளியாக உள்ளது.மேலும், இப்படத்தின் டீசர் தஞ்சாவூரில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் வேறு இடத்தில் டீசரை வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.