Trisha: நான் ரெடி.. இயக்குநர் செல்வராகவன் ட்வீட்டிற்கு 10 ஆண்டுகள் கழித்து பதில் சொன்ன த்ரிஷா!
சென்னை: நடிகர் வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான படம் ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே.
தமிழில் தனுஷ், நயன்தாரா கூட்டணில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்தப் படம்.
முன்னதாக தெலுங்கில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் செல்வராகவன். படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, வெங்கடேஷ் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது.

செல்வராகவன் ட்வீட்டிற்கு 10 ஆண்டுகள் கழித்து பதிலளித்த த்ரிஷா: நடிகர் வெங்கடேஷ், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டில் தெலுங்கில் வெளியானது ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே. செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த இந்தப் படம் தமிழில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக்காகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் குவித்தது. குடும்ப உறவுகளை சிறப்பாக வெளிப்படுத்தி வெங்கடேஷ் மற்றும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இடையிலான மகன் -அப்பா உறவை இந்தப் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் செல்வராகவன்.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கடேஷ் -த்ரிஷா இடையிலான காதல் மிகவும் சிறப்பாக இந்தப் படத்தில் எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் தன்னுடைய ஸ்டைலில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இணைத்திருந்தார் செல்வராகவன். தற்போதும் டிவியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்ததாகவும் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டிலேயே இந்த ட்வீட்டை அவர் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த ட்வீட்டிற்கு தற்போது நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார். தான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ரெடி என்று அவர் தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். பத்து ஆண்டுகள் கழித்து தற்போது செல்வராகவன் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார் த்ரிஷா. இதனால் தற்போது அவர் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஹின்ட்டை கொடுத்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தற்போது த்ரிஷா லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதேபோல நடிகர் வெங்கடேஷும் சைலேஷ் கோலானு இயக்கத்தில் சைந்தவ் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். நானே வருவேன் படத்தை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். மேலும் யுகானிக்கி ஒக்கடு 2 படத்தை இயக்கி வருகிறார். இவர்கள் மூவரும் இணைந்து ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே படத்தின் இரண்டாவது பாகத்தில் இணைந்தால் ரசிகர்களுக்கு படம் கொண்டாட்டமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


Click it and Unblock the Notifications











