Trisha Video: த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை.. வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியீடு!
சென்னை: நடிகை த்ரிஷா அடுத்தடுத்தப் படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு த்ரிஷா நடிப்பில் தி ரோட் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

அருண் வசீகரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
தி ரோட் படம் குறித்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா: நடிகை த்ரிஷா அடுத்தடுத்த சிறப்பான படங்களால் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவையாக தன்னுடைய ஆளுமையான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார். 40 வயதான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள லியோ படம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியான நிலையில், த்ரிஷாவின் கேரக்டர் அதிகமாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் குடும்ப பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் விஜய், த்ரிஷா இடம்பெற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்காக ரகிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு த்ரிஷா லீட் கேரக்டரில் நடித்துள்ள தி ரோட் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

க்ரைம் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ள இந்தப்படத்தை அருண் வசீசரன் இயக்கியுள்ளார். மதுரையில் கடந்த 2000ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தன்னுடைய ரீ என்ட்ரி மூலம் மீண்டும் முன்னணி கதாநாயகிகள் வரிசையில் இணைந்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் இணைந்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துவரும் த்ரிஷாவின் நடிப்பில் தி ரோட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் சூட்டிங்கில் உள்ள த்ரிஷா, அங்கிருந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ரோட் படம் வெளியான நேரத்தில் தான் வெளிநாட்டில் சூட்டிங்கில் இருந்ததை குறிப்பிட்ட த்ரிஷா, ரசிகர்களின் அன்பை அங்கிருந்தபடியே தன்னால் உணர முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
படம் குறித்து பாசிட்டிவ்வாக பகிரப்பட்டுள்ள ரசிகர்கள் மற்றும் மீடியாவின் விமர்சனங்கள், பதிவுகளுக்கும் த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான இவை அனைத்தையும் தான் படித்ததாகவும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசின்போது தான் சென்னையில் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டதாகவும் ஆனால் அந்த ஆசை சூட்டிங் காரணமாக நிறைவேறாமல் போனதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











