மருதாணியில் குந்தவை முகம்.. என்ன க்யூட்டா போட்டுருக்காங்க பாருங்க!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
தமிழில் இத்தகைய பிரம்மாண்ட படைப்புகள் குறைவு என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படம் போலவே இதன் கேரக்டர்கள் வடிவமைப்பும் மிகவும் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பான விமர்சனங்கள்
விமர்சகர்களும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். படத்திற்கான ரேட்டிங்குகளும் அதிகமான அளவில் கிடைத்துள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் வசூலும் தாறுமாறாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் உருவாக்கம், காட்சி அமைப்புகள், திரைக்கதை என அனைத்தையும் செதுக்கியுள்ளார் மணிரத்னம்.

மில்லியன் டாலர் கேள்வி
இதுபோன்ற ஒரு படத்தை இல்லையில்லை இரண்டு படங்களை எப்படி ஒரு மனிதரால் 150 நாட்களில் முடிக்க முடியும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. அதை சாத்தியப்படுத்திய அளவில் சிறந்த இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது மெனக்கெடல் இந்தப் படத்தின்மூலமும் வெளிப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கம்பேர்
இந்தப் படத்தை பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளுடன் ரசிகர்கள் தற்போது கம்பேர் செய்துவருகின்றனர். இதனிடையே, படத்தின் கேரக்டர் தேர்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்களின் கேரக்டர்கள் ரசிகர்களை வசீகரித்துள்ளன.

வரவேற்பை பெற்ற குந்தவை கேரக்டர்
குறிப்பாக படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாவின் கேரக்டர் மிகுந்த வரவேற்பிற்குள்ளாகியுள்ளது. அவரது நடை, உடை, பாவனை ரசிகர்களை மிகச்சிறப்பாக கவர்ந்துள்ளன. இதற்கு படத்தின் காஸ்ட்யூம் டிசைனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மருதாணியாக வடித்த குந்தவை முகம்
இதனிடையே குந்தவையின் கேரக்டரை தன்னுடைய கைகளில் மருதாணியாக மிகவும் சிறப்பான வகையில் ஒரு கலைஞர் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. குந்தவை மற்றும் அந்த மருதாணி இரண்டையும் அந்த வீடியோவில் அடுத்தடுத்து காட்டுகின்றனர். வித்தியாசமே இல்லாமல் அவையிரண்டும் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











