பிரேக் முடிஞ்சாச்சு.. சோசியல் மீடியாவுக்கு மீண்டும் திரும்பிய ஹீரோயின்.. செல்ஃபியுடன் ரீ என்ட்ரி!
சென்னை: சமூக வலைத்தளத்துக்கு பிரேக் கொடுத்திருந்த நடிகை த்ரிஷா இப்போது மீண்டும் திரும்பியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக, ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

லாக்டவுனுக்கு முன்
இதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படம். இதில் த்ரிஷா டாக்டராக நடிக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தான் ஆவலாக எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார், த்ரிஷா. இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க, த்ரிஷா ஒப்பந்தம் ஆகி இருந்தார். கருத்துவேறுபாடு காரணமாக இதில் இருந்து விலகினார்.

கவுதம் வாசுதேவ் மேனன்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் தனது பக்கத்தைப் பரபரப்பாக வைத்திருப்பார். இந்த லாக்டவுனில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார்.

கொஞ்சம் மறதி தேவை
இந்நிலையில் நடிகை த்ரிஷா, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து கடந்த மாதம் விலகினார்ர். இதுபற்றி அவர், இந்த நேரத்தில் என் மனதுக்கு கொஞ்சம் மறதி தேவை. டிஜிட்டல் போதைபொருள் போன்றது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும். விரைவில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறி இருந்தார்.

மீண்டும் திரும்பினார்
சமூக வலைத்தளங்களில் இருந்து த்ரிஷா இப்படி திடீரென விலகுவது வழக்கம். இந்நிலையில் நடிகை த்ரிஷா, 5 வார இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரும்பியுள்ளார். திடீரென ஒரு செல்ஃபி போட்டோவை பதிவிட்டு, தனது என்ட்ரியை தொடங்கி இருக்கிறார். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலர் ரீவிட் செய்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











