Trisha: அஜித் போல தான் கணவர் வேண்டும்.. அதிகமான ஷேரிங்கில் த்ரிஷா பழைய பேட்டி!

சென்னை: நடிகை த்ரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணியில் உள்ளார். முன்னணி ஹீரோக்களுடன் தொடாந்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கமல், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்துள்ளார் த்ரிஷா.

அவரது நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தள்ளது. அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

Actress Trisha said that she wants her future husband like Actor Ajith in her throwback interview

நடிகை த்ரிஷா: நடிகை த்ரிஷா அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளை கடந்து இவர் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளன.

விஜய், அஜித்துடன் ஜோடி: தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் -த்ரிஷா நடிப்பில் வெளியான லியோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது- இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி இணைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது அசர்பைஜானில் நடந்து வருகிறது- தொடர்ந்து கமல் -மணிரத்னம் கூட்டணியில் இணைந்துள்ளார் த்ரிஷா.

40 வயதான த்ரிஷா: இவருக்கு 40 வயதாகியும் திருமணம் நடக்காமல் உள்ளது. இவரது திருமணம் குறித்துதான் எப்போதும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இவரது திருமணம் நிச்சயதார்த்தம் வரையில் சென்று நின்ற நிலையில் இவரது திருமணம்தான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தற்போது த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்து பல்வேறு தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

திருமணம் குறித்து த்ரிஷா பேட்டி: இதனிடையே தற்போது த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகான் இருவரும் பேசுபொருளாகி உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து த்ரிஷா முன்னதாக கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தன்னுடைய கவனம் முழுவதும் திரைப்படங்களில் நடிப்பதிலேயே உள்ளதாக அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். திருமணம் செய்யும் நபர் தனது மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்றும் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார்.

அஜித் போல கணவர் வேண்டும்: அப்படி கஷ்டப்பட தான் விரும்பவில்லை என்றும் அஜித்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் ஜென்டில்மேன் என்றும் குறிப்பிட்டுள்ள த்ரிஷா, அவர் ஒரு நல்ல கணவராகவும் நல்ல அப்பாவாகவும் இருப்பதாகவும் அவரை போல ஒருவர்தான் தனக்கு கணவராக வரவேண்டும் என்றும் த்ரிஷா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டி த்ரிஷாவின் பழைய பேட்டி என்றாலும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X