Actress Trisha: லியோ படத்தின் கலர்புல் வீடியோ வெளியிட்ட த்ரிஷா.. ப்ளடி க்யூட்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது லியோ படம்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சர்வதேச அளவில் வசூல்மழை பொழிந்து வருகிறது.

இந்தப் படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி பாராட்டுக்களை பெற்றுள்ளது. இவர்களின் கூட்டணி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
நடிகை த்ரிஷா: நடிகர் விஜய், த்ரிஷா கூட்டணியில் சமீபத்தில் வெளியாகியுள்ளது லியோ படம். 14 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தில் இந்தக் கூட்டணி இணைந்துள்ள நிலையில் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வசூல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் சிறப்பாக அமைந்துள்ளது. படம் ரிலீசாகி 10 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
காஷ்மீர் சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக காஷ்மீரில் 52 நாட்கள் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டது. கடுமையான குளிர், நிலநடுக்கம் உள்ளிட்டவற்றிற்கு இடையில் படக்குழுவினர் பட்ட கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டனர். படத்தின் அதிகமான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளன. படத்தின் லொகேஷன்கள் சிறப்பாக அமைந்து ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளன.

சூட்டிங் ஸ்பாட் வீடியோ: இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றபோது நடிகை த்ரிஷா தனியாகவும் விஜய் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தும் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இவை அனைத்துமே ரசிகர்களுக்கு அடுத்தடுத்து உற்சாகத்தை அளித்திருந்தன. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை தற்போது த்ரிஷா தன்னுடைய சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய், சஞ்சய் தத்துடன் புகைப்படங்கள்: காஷ்மீர் சூட்டிங்கின்போது விதவிதமான அவுட்பிட்களில், விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட படத்தின் நடிகர்களுடனும் த்ரிஷா இந்த வீடியோவில் காணப்படுகிறார். மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்ட கத்திகள் உள்ளிட்டவையும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. காஷ்மீரின் அழகான பின்புலத்திலும் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 10 நாட்களை கடந்தும் இந்த அழகான, இனியமையான தருணங்களை மறக்காமல் ரசிகர்களிடம் ஷேர் செய்துள்ளார் த்ரிஷா.

விடாமுயற்சி சூட்டிங்கில் த்ரிஷா: தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அசர்பைஜானில் உள்ளார் த்ரிஷா. இதன் புகைப்படங்களையும் அவர் தொடர்ந்து பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்தடுத்து ரஜினி, விஜய், அஜித் என தன்னுடைய ரீ என்ட்ரியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார் த்ரிஷா. அவரது கைவசம் அதிகமான படங்கள் உள்ள நிலையில், மிகவும் பிசியாக நடித்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து அவர் திரைத்துறையில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நீடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











