யாரு இந்த குட்டி ஏஞ்சல்... முன்னணி நடிகை வெளியிட்ட க்யூட் புகைப்படம்!

சென்னை : சமூக வலைதளங்களில் இப்போது முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து இன்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா.

தமிழில் ஜோடி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் பின் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இப்பொழுது முன்னணி நாயகியாக வலம் வரும் நிலையில் இவர் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் ஏஞ்சல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கொடிகட்டி பறந்து

கொடிகட்டி பறந்து

ரசிகர்களின் கனவுக்கன்னியாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா இன்று வரை முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான த்ரிஷா, பின் அமீர் இயக்கிய "மௌனம் பேசியதே" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

தெலுங்கிலும்

தெலுங்கிலும்

பார்க்க க்யூட்டாகவும் என்றும் இளமையுடன் இருக்கும் த்ரிஷா மௌனம் பேசியதே திரைப்படத்தை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, லேசா லேசா என தொடர் வெற்றிப் படங்களில் நடிக்க தெலுங்கு திரைப்படத் துறையிலும் தனது காலடியை பதிக்க ஆரம்பித்து இப்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முன்னணி நடிகையாக

முன்னணி நடிகையாக

இவர் நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு ரசிகர்களும் பல கோடி கணக்கில் பெருகினர்.

இதயங்களை வென்றார்

இதயங்களை வென்றார்

மாடர்ன் கேர்ள், குடும்பப்பாங்கான பெண், நெகட்டிவ் ரோல் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தனது தனித்துவமான நடிப்பின் மூலம் சிறப்பாக செய்து முடித்து ரசிகர்களை கவரும் திறமை கொண்ட த்ரிஷா சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 என்ற திரைப்படத்தில் நடித்து பலரது இதயங்களையும் வென்றார்.

குழந்தை புகைப்படம்

குழந்தை புகைப்படம்

இவ்வாறு உச்ச நட்சத்திரமாக வலம் வரும் த்ரிஷா இப்பொழுது ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் இப்பொழுது தனது குழந்தை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

Recommended Video

simbhu,Trisha வுக்கு திருமணம்? செய்தி உண்மையா?
குட்டி பாப்பா

குட்டி பாப்பா

மிகவும் குட்டி பாப்பாவாக இருக்கும் த்ரிஷா சோபாவில் மல்லாந்து படுத்துக்கொண்டு க்யூட்டான லுக்கில் இருக்கும் இந்த சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு "ஏஞ்சல் ஃபேஷ்.. டெவில் தாட்" என அனைவரும் மிரண்டு போகும் வகையில் கேப்சனை போட்டு பலரையும் ரசிக்க வைத்துள்ள இந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் இந்த குட்டி ஏஞ்சல் த்ரிஷாவின் அரிய புகைப்படத்தை வர்ணித்து பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X