நள்ளிரவு 12 மணி.. 5 கேக்குகள்.. முதல்வர் விஜயின் பிறந்தநாள்.. ஒரே ஒரு போட்டோவால் அதிரவிட்ட த்ரிஷா!

சென்னை: தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய தினம் தனது 52வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினார். அவருக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து சோசியல் மீடியாவை அதிர வைத்தனர்.

வாழ்த்து இல்லை: விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஒட்டுமொத்த கோலிவுட்டே வாழ்த்து மழையைப் பொழிந்த போதும், சமூக வலைத்தளங்களில் நடிகை த்ரிஷா நேற்று மாலை வரை எந்தவொரு வாழ்த்துப் பதிவையும் போடாமல் இருந்தார். இதனால், விஜய்க்கு த்ரிஷா ஏன் இன்னும் வாழ்த்துச் சொல்லவில்லை? என நெட்டிசன்கள் பலரும் விவாதிக்கத் தொடங்கினர். மேலும் ஒருபடி மேலே போய், முதலமைச்சர் விஜய் த்ரிஷாவைத் தள்ளி வைத்திருக்கிறார், அதனால் தான் த்ரிஷா வாழ்த்துப் பதிவு போடவில்லை என்ற காரசாரமான வதந்திகளும், நெகட்டிவ் கருத்துகளும் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவின.

CM Vijay Trisha birthday
Photo Credit:

நள்ளிரவில் 5 கேக்குகள்: இந்நிலையில் நடிகை த்ரிஷா சற்று முன்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த க்யூட்டான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில், க்யூட்டான டிசைன் சட்டையில் முதலமைச்சர் விஜய் புன்னகையோடு கேக்கைப் பார்த்தபடி இருக்க, அருகில் நடிகை த்ரிஷா அவரை ஆசையோடு உற்று நோக்கியபடி போஸ் கொடுத்துள்ளார். டேபிளில் பெரிய அளவிலான 2 கேக்குகள் மற்றும் குட்டி பாக்ஸ்களில் 3 கேக்குகள் என மொத்தம் 5 கேக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ரெட் ஹார்ட்டின்: அந்தப் புகைப்படத்திற்கு த்ரிஷா கொடுத்துள்ள கேப்ஷன் தான் இப்போது இணையத்தையே உருக வைத்துள்ளது. அதில், "To the person who makes it all worth it, HBD என போட்டுள்ளார். அதாவது, எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் அந்த மனிதருக்கு.. பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு, கூடவே ஒரு ரெட் ஹார்ட்டின் மற்றும் கண் திருஷ்டி எமோஜியையும் பதிவிட்டுள்ளார். மேலும், தான் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தான் விஷ் செய்தேன் என்பதையும் த்ரிஷா அந்தப் பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் பர்த்டே போட்டோ சமூக வலைத்தளங்களில் சும்மா வெறித்தனமாக டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X