Trisha: ரெடியா.. லியோ போஸ்டரை வெளியிட்டு ப்ரமோஷனை தூள் கிளப்பிய த்ரிஷா!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ஃபீவர் சர்வதேச அளவில் ரசிகர்களை அதிகமாக பீடித்துள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர்.
சர்வதேச அளவில் டிக்கெட் புக்கிங் துவங்கியுள்ள இடங்களில் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை ஆவதை பார்க்க முடிகிறது.

நடிகை த்ரிஷா ஷேர் செய்த லியோ படத்தின் போஸ்டர்: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சர்வதேச அளவில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் துவங்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகமான டிக்கெட் புக் ஆவதை பார்க்க முடிகிறது. இந்தப் படத்தின் ப்ரமோஷனை ஒருபுறம் படக்குழுவினர் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் ப்ரமோஷனையொட்டி முன்னதாக படத்தின் வீடியோக்கள், கிளிம்ப்ஸ், ட்ரெயிலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளதையடுத்து லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்து வருகின்றனர்.
விஜய்க்கு என்று ஒரு மாஸ் இருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜின் இயக்கமும் இந்தப் படத்திற்கு கூடுதல் அட்ராக்ஷனை கொடுத்துள்ளது. படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் என நடிகர்கள் பட்டாளமும் படத்திற்கான கவர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரில் அவர் கெட்ட வார்த்தையில் பேசியுள்ளதும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வார்த்தை தற்போது மியூட் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் படத்தின் போஸ்டர் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஆக்ஷன், ஆக்ஷன் மற்றும் அதிகமான ஆக்ஷன் என்று தெரிவித்திருந்தார். இந்த போஸ்டரில் படத்தின் நடிகர்கள் அனைவரும் ஏறக்குறைய இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த போஸ்டரை தற்போது த்ரிஷாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் விஜய், கௌதம் மேனன், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். விஜய் குதிரையில் போஸ் கொடுத்தபடி காணப்படுகிறார். சஞ்சய் தத் மிரட்டலாகவும் த்ரிஷா பயத்துடனும் உள்ள நிலையில் அர்ஜூன் சிரித்தபடி உள்ளார். ரசிகர்களை வெகுவாக இந்த போஸ்டர் கவர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த படக்குழுவினர் இந்த போஸ்டரை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











