Trisha :மேக்கிங் வீடியோவை வெளியிட்ட குந்தவை.. மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்குமா என ஏக்கம்!
சென்னை : நடிகை த்ரிஷா, குந்தவையாக கலக்கலான பர்பார்மென்ஸ் கொடுத்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2.
இந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்தக் கேரக்டருக்கு மிகவும் சிறப்பாக நியாயம் செய்துள்ளார் த்ரிஷா.
பொன்னியின் செல்வன் 2 படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி, தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மீண்டும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இணைய த்ரிஷா விருப்பம் : நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஷோபிதா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது பொன்னியின் செல்வன் 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகமும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா குந்தவையாக மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் விக்ரம், ஜெயம் ரவிக்கு சகோதரியாக, சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய ஆளுமையாக சிறப்பாக நடித்துள்ளார் த்ரிஷா. இவரின் மேக்கப், ஆபரணங்கள் உள்ளிட்டவை இவருக்கு மிகவும் பொருத்தமாக அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக இவருக்காக மெனக்கெட்ட ஆர்ட்டிஸ்ட்கள் உள்ளிட்டவற்றை இணைத்து ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோவும் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.

படம் வெளியாகி குந்தவையின் நடிப்பு மட்டுமின்றி அவரது ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது அவர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் படத்தின் துவக்கம் முதலே தன்னுடைய ஒவ்வொரு மேக்கிங் காட்சியையும் அவர் இணைத்துள்ளார். படத்தில் தனக்காக பயன்படுத்தப்பட்ட ஆபரணங்களையும் மேக்கப்பையும் அவர் பிரத்யேகமாக காட்டியிருந்தார்.
இந்நிலையில் படத்தில் பயன்படுத்தப்பட்ட விலங்குகளையும் குறிப்பாக யானையையும் அணைத்தபடி அவர் போஸ் கொடுத்துள்ளார். எப்போதுமே விலங்குகள்மீது அதிக அக்கறையுடன் த்ரிஷா காணப்படுவார். அந்தவகையில் அந்த யானையும் த்ரிஷாவுடன் மிகவும் குழைந்தபடி காணப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது மிகவும் கனமான ஆபரணங்களை அணிந்து த்ரிஷா நடித்துள்ளார். இந்தக் காட்சிகளையும் இணைத்துள்ளார்.

மேலும் இந்த சூட்டிங்கின்போது இடையிடையில் அவர் ஓய்வெடுக்கும் காட்சிகளையும் இணைத்துள்ளார். படத்தின் மானிட்டர் உள்ளிட்டவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவில் அவரது ஆபரணங்கள் ஜொலிக்கின்றன. மேலும் படக்குழுவினருடன் இணைந்து ஜாலி செய்யும் காட்சிகளையும் அவர் இந்த வீடியோவில் இணைத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் மிகவும் கொண்டாட்டமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் இந்தக் கூட்டணியில் இணையவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











