சப்ப காரணங்களுக்காக சேர்ந்து வாழணுமா?.. விவாகரத்து பற்றி த்ரிஷா என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகம் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமா உலகைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தொடர்பாகத்தான். குறிப்பாக, நேற்று ஜெயம் ரவியின் பிறந்தநாள், இப்படியான நிலையில், தனது பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னர், அதாவது நேற்று முன் தினம் ஜெயம் ரவி தனது விவாகரத்து குறித்து தெரிவித்தார். இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியானது. இப்படியான நிலையில் திருமண பந்தம் குறித்தும் விவாகரத்து தொடர்பாகவும் நடிகை த்ரிஷா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

நடிகர் ஜெயம் ரவி தனது விவாகரத்தை அறிவிக்கும்போது தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நன்மைக்காக விவாகரத்து செய்வதாக தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இன்று அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகி கிடக்கிறேன். எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியப்படுத்தவில்லை. ஜெயம் ரவி மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்து வெளியிட்டுள்ளது எனக்கு கவலையை அளித்துள்ளது. நான் என்னுடைய இரு மகன்களின் வருங்காலத்தை நினைத்துக் கவலைப்படுகிறேன். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து ஜெயம் ரவியிடம் பேச முயற்சித்த போது, அவர் அதற்கு அனுமதியே வழங்காமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தவறான பேச்சுகள்: மேலும், சமூக வலைதளங்களில் என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்கள் பரவவும் இது காரணமாக அமைந்து விட்டது. ஜெயம் ரவி இப்படி செய்வார் என கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. 18 வருடங்கள் ஒன்றாக இருந்த வாழ்க்கை முற்றிலுமாக உடைந்து போய் விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

trisha jayam ravi jayam ravi divorce

ஆர்த்தியின் இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜெயம் ரவி தனது குழந்தைகள் குறித்து எதுவுமே யோசிக்காமல் விவாகரத்து முடிவை எடுத்துவிட்டாரா? எனவும், விவாகரத்து முடிவை எடுத்தவர், அது குறித்து தனது மனைவி ஆர்த்தியிடம் முறையாக பேசக்கூட இல்லை என்பது பலருக்கு அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

த்ரிஷா: இந்நிலையில் நடிகை த்ரிஷா திருமணம் குறித்தும், விவாகரத்து குறித்தும் ஒருமுறை பேசியது இணையத்தில் உலா வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம். அதாவது, " என்னிடம் பலர் மிகவும் சாதாரணமாக எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகின்றீர்கள் எனக் கேட்கின்றார்கள். ஆனால் எனக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை. குறிப்பாக நான் யாருடன் எனது எதிர்காலத்தை எடுத்துக்கொண்டு போகப்போகின்றேன். அப்படியான ஒரு மனிதரை நான் எப்போது சந்திப்பேன் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அப்படியான ஒருவரைப் பார்க்கும்போதுதான், எனது மீதமுள்ள வாழ்க்கையை அவருடன் வாழப்போகின்றேன் என எனக்குத் தோன்றவேண்டும்.

விவாகரத்து: எனக்கு விவாகரத்தில் நம்பிக்கையும் இல்லை, நாட்டமும் இல்லை. திருமண உறவில் இருந்து நான் விவாகரத்து வாங்கப்போவதில்லை. அதேநேரத்தில், என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான திருமணத் தம்பதிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தவறான காரணங்களுக்காகவே இணைந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த திருமண வாழ்வில் அவர்களால் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியவில்லை. மேலும், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினர் போன்ற தவறான காரணங்களுக்காக இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் எனது நண்பர்களே பலர் உள்ளனர்.

விபரீதம்: எனக்கு இதுபோன்ற திருமணத்தை செய்துகொள்வதில் விருப்பமே இல்லை. நான் எனக்குச் சரியானவரை சந்திக்கும்வரை காத்திருக்கத் தயாராக இருக்கின்றேன். இது நடக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை. அதாவது எனக்கு திருமணமே நடக்கவே இல்லை என்றால் கூட பரவாயில்லை. என்னால் அதனை புரிந்து கொள்ள முடியும். அதற்காக நான் அதனை ஏதோ விபரீதம் என நினைக்கவில்லை. அது இயல்பானது என நினைக்கின்றேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X