தளபதி 67 படத்தில் த்ரிஷாவிற்கு என்ன ரோல் தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பைலிங்குவல் படமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

வாரிசு
மற்றொரு புறம் வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களுடன் அப்செட்டில் உள்ளனர். வாரிசு படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

தளபதி 67
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது, விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு மற்றும் அப்டேட்டை தான். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அவரே பல இடங்களில் உறுதி செய்துள்ளார்.

சோஷியல் மீடியாவிலிருந்து விலகினார்
ஆனால் இதுவரை தளபதி 67 படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஆனால் லோகேஷ் கனகராஜ் எங்கு போனாலும் சரி அவரிடம் தளபதி 67 படம் பற்றியே பலரும் கேட்கிறார்கள். சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் இதை பற்றியே கேட்பதால் தற்காலிகமாக சோஷியல் மீடியாவில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ்.தளபதி 67 படம் பற்றி மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என்று கூட சொல்லி விட்டார்.

கேங்ஸ்டர் கதையா?
அதே சமயம் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது வரை வெளியான தகவல்களின் படி, தளபதி 67 படத்தில் விஜய், 50 வயது கேங்ஸ்டர் ரோலில் நடிப்பதாகவும், இது பிகில் படத்தில் வரும் மைக்கேல் ராயப்பன் கேரக்டர் போன்றது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது தான் தளபதி 67 படத்திற்காக லோகேஷ் தயாரித்துள்ள கதையா என தெரியவில்லை. ஆனால் தளபதி 67 கேங்ஸ்டர் பற்றிய கதை. அதுவும் மும்பை தாதா பற்றிய கதை என்றும், தளபதி 67 படத்தின் ஷுட்டிங் மும்பையில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

என்ன ரோல்?
தளபதி 67 திரைப்படம் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தில் நடிகை த்ரிஷா நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. தற்போது த்ரிஷா இப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என பல படங்களில் ஜோடியாக நடித்த விஜய் மற்றும் திரிஷா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











