Trisha :லோகேஷும் விஜய்யும் இணைந்து சிறப்பான சம்பவத்தை செய்துட்டு இருக்காங்க.. த்ரிஷா ரெஸ்பான்ஸ்!

கோவை : நடிகை த்ரிஷாவின் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் த்ரிஷா. நடிகர் கார்த்தி -த்ரிஷா காம்பினேஷன் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.

படத்தின் ப்ரமோஷனல் டூரை நேற்றைய தினம் படக்குழுவினர் துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக நேற்றைய தினம் கோயம்புத்தூரில் ரசிகர்களை சந்தித்தனர்.

Actress Trisha updates about Leo movie in Ponniyin selvan promotions in Coimbatore

லியோ குறித்து த்ரிஷா அப்டேட் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்த நிலையில், சர்வதேச பாக்ஸ் ஆபீசில் படம் சிறப்பான வசூலையும் குவித்தது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியானது.

முதல் பாகத்திற்கு கிடைத்த அதிரி புதிரி வரவேற்பை அடுத்து ரசிகர்கள் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், இரண்டாவது பாகம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், ரிலீஸ் தேதிக்காக தொடர்ந்து காத்திருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டனர்.

கடந்த சில வாரங்களாகவே படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டனர். இந்த அப்டேட்கள் படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து எகிற செய்தது. படத்தின் இசை வெளியீடும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் ஏஆர் ரஹ்மான் மிரட்டியிருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ஆன்த்தமும் வெளியானது. இதை ஏஆர் ரஹ்மான் வெளியிட்டார்.

Actress Trisha updates about Leo movie in Ponniyin selvan promotions in Coimbatore

இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் பிரமோஷனல் டூரை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக கோயம்புத்தூரில் அவர்கள்து பயணம் துவங்கியுள்ளது. முன்னதாக அவர்களது பயணத்தின் புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் கோயம்புத்தூரில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் த்ரிஷா மேடையில் பேச முற்பட்டபோது, லியோ லியோ என ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால் லியோ குறித்து நடிகை த்ரிஷா அப்டேட் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். லோகேஷ் மற்றும் விஜய் இணைந்து லியோ படத்தில் சிறப்பான சம்பவத்தை மேற்கொண்டு வருவதாக த்ரிஷா தெரிவித்தார். பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றிக்கு லியோ டீம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும் லியோ குறித்து மேலும் அப்டேட்டை அந்தப் படத்தின் பிரமோஷன்களில் பார்க்கலாம் என்று த்ரிஷா முடித்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X