தளபதி விஜய்யின் தவெகவில் இணைகிறாரா த்ரிஷா? என்னங்க புதுசு புதுசா சொல்றீங்க!
சென்னை: தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதெல்லாம் புதிதான விஷயம் இல்லை என்றாலும் நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதும் அதன் பின்னர் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகப்போவதாகவும் அறிவித்ததுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் கூட மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி தேர்தலைச் சந்தித்த பின்னரும் கூட தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். ஆனால் விஜய் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, அதன்பின்னர் முழுநேர அரசியலில் களமிறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி விஜய் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரைத்துறையினர் அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது கட்சி நிர்வாகிகள் என பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனவும், தமிழக வெற்றிக் கழகத்தினர் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

விஜய்யின் பிறந்த நாளுக்கு அடுத்த நாளான 23ஆம் தேதியில் நடிகை த்ரிஷா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் இதுவரை இணையத்தில் வெளியாகாத புகைப்படம் என்பதால், அந்த புகைப்படத்தை வைத்து பல்வேறு கிசுகிசுக்கள் பேசப்பட்டது. குறிப்பாக கில்லி, வில்லு படங்களில் நடித்தபோது விஜய், த்ரிஷாவை வைத்து கிசுகிசுக்கள் பேசப்பட்டதைப் போலவே இப்போதும் பேசப்பட்டது. ஆனால் பிரபல சினிமா செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன் பேசப்படும் கிசுகிசுக்கள் அனைத்தும் பொய். விஜய் உண்மையிலேயே நல்ல மனிதர் என சான்றிதழ் கொடுத்தார்.
எல்லாம் ஒரு காரணமாகத்தான்: இப்படியான நிலையில், த்ரிஷாவின் போஸ்ட்க்கான காரணம் குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றது. அதில் விஜய் பிறந்த நாளில் வாழ்த்து சொல்லி இருந்தால் கூட்டத்தோடு ஒருவராக த்ரிஷா குறித்த செய்தியும் சென்றிருக்கும், ஆனால் அடுத்த நாள் வாழ்த்து கூறியதால்தான் த்ரிஷா குறித்து அனைத்து ஊடகங்களும் பேசியது. இதற்காகத்தான் த்ரிஷா இவ்வாறு செய்தார் என கூறப்படுகின்றது.

தவெகவில் த்ரிஷா: மேலும், புகைப்படம் குறித்த தகவல்கள் ஓரளவுக்கு உண்மை என்றாலும், த்ரிஷா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது. இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரத்தில் இப்போது இதுதான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. த்ரிஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் விருது பெறும்போது எடுத்த புகைப்படத்தை கவர் பிக்சராக வைத்துள்ளார். மேலும் விஜய்யின் அலுவலகம் உள்ள அப்பார்மெண்ட்டிலேயே தனக்கும் ஒரு வீடு வாங்கியுள்ளார்.

கொ.ப.செ. த்ரிஷா: இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் த்ரிஷா விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகின்றது. மேலும் அதிமுகவில் எப்படி ஜெயலலிதா செயல்பட்டு எம்.ஜி.ஆர். இருக்கும்போதே கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறினாரோ அதேபோல் த்ரிஷாவும் கொள்கை பரப்புச் செயலாளராக வரும் காலங்களில் மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் த்ரிஷா தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் என்பதால் அது விஜய்யின் அரசியல் பயணத்தில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











