Trisha: க்யூட் புகைப்படத்துடன் விஜய்க்கு பர்த்டே விஷ் சொன்ன த்ரிஷா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா இணைந்து லியோ படத்தில் நடித்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சூப்பர் ஜோடி என்ற பெயரை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் 14 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
க்யூட் புகைப்படத்துடன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன த்ரிஷா: நடிகர் விஜய், த்ரிஷா இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் சூப்பர்ஹிட் ஜோடியாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த ஜோடி தற்போதும் ப்ரெஷ்ஷாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் மற்றும் தற்போதைய படங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் விஜய், தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரைக்காட்டிலும் அவரது ரசிகர்கள் இந்த நாளை திருவிழாவாக கொண்டாடினர். ஒரு பக்கம் காமன் டிபியையும், வீடியோக்களையும் ரசிகர்கள் வெளியிட்ட நிலையில், மறுபுறம் லியோ படக்குழுவினர் படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை தொடர்ந்து கொடுத்தனர். ரசிகர் ஒருவர் உருவாக்கிய லியோ படத்தின் ட்ரெயிலர் வீடியோவும் ட்ரெண்டானது.
இதனிடையே நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள், முன்னணி அரசியல்வாதிகள், ரசிகர்கள் என தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர் மன்றங்களும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தனர். மொத்தத்தில் இந்த நாள் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காஷ்மீர் மலைப்பகுதியில் பனிகளுக்கிடையில் விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் மிகவும் க்யூட்டாக காணப்படுகின்றனர். முன்னதாக விமானநிலையம் உள்ளிட்ட இடங்களிலும் தனியாகவும் ரசிகர்களுடன் இணைந்தும் இவர்கள் இருவரும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் மற்றும் த்ரிஷா இருவரும் ட்ரெண்டிங்கில் உள்ளனர். நடிகர் விஜய் இந்த புகைப்படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரின் லுக்கில் காணப்படுகிறார்.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது என்ற கருத்து ரசிகர்களிடையே காணப்படுகிறது. அவரது முந்தைய படங்களும் இதற்கு உதாரணமாக அமைந்துள்ளன. ஆனால் லியோ படத்தில் த்ரிஷாவிற்கு வெயிட்டான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரிஷா நடிப்பில் அடுத்தடுத்து சிறப்பான படங்கள் வெளியாகிவரும் சூழலில், அவர் லியோ படத்தில் 18 வயது பெண்ணிற்கு அம்மாவாக விஜய்யின் மனைவியாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது முன்னணி நாயகியாக நடித்துவரும் த்ரிஷா லியோ படத்தில் வயதான கேரக்டரில் நடித்து வருகிறார் என்றால், அந்த கேரக்டர் எத்தகைய வெயிட்டானதாக இருக்கும் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இடையிலான பிளாஷ்பேக் காட்சிகள் மிகவும் ரொமான்டிக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதன் முறையாக இந்த விஷயத்தை லோகேஷ் கையிலெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











