காஷ்மீரில் குரங்குகளுக்கு பழம் கொடுக்கும் லியோ பட நடிகை.. த்ரிஷா காஷ்மீர் டயரீஸ்!

ஸ்ரீநகர் : நடிகர் விஜய், த்ரிஷா ஜோடி 14 வருடங்களுக்கு பிறகு தற்போது லியோ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த ஜோடி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் முதல் வாரத்தில் லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் துவங்கியது. இதற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர்.

தொடர்ந்து காஷ்மீரின் பல படங்களில் இருந்துக் கொண்டு, தனியாகவும், படக்குழுவினருடனும் இணைந்து த்ரிஷா புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

லியோ படம்

லியோ படம்

நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் -லோகேஷ் இணைவதாலும், விக்ரம் படத்தின் அதிரிபுதிரி வெற்றியாலும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் -த்ரிஷா இணைந்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது.

கடுமையான குளிரில் லியோ சூட்டிங்

கடுமையான குளிரில் லியோ சூட்டிங்

காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங் கடுமையான குளிருக்கிடையில் கடந்த 40 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே விஜய்யுடன் த்ரிஷா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகுந்த வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விமானநிலையத்தில் பெண் விமானியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

த்ரிஷா புகைப்படங்கள்

த்ரிஷா புகைப்படங்கள்

தொடர்ந்து தனியாகவும் படக்குழுவினர் போட் அவுசில் ரைட் போகும்படியாகவும் த்ரிஷா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துவரும் நிலையில், த்ரிஷாவின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்களை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பல ஆண்டுகளை சினிமாவில் கடந்த போதிலும், எப்படி புத்தம் புது மலராக த்ரிஷா காட்சி அளிக்கிறார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குரங்குகளுக்கு உணவளித்த த்ரிஷா

குரங்குகளுக்கு உணவளித்த த்ரிஷா

இதனிடையே தற்போது லியோ சூட்டிங்கிற்காக காஷ்மீரில் இருக்கும் த்ரிஷா, தன்னுடைய ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்துக் கொண்டு குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தில் எந்தவிதமான பயமும் இல்லாமல் கேஷுவலான நடிகை த்ரிஷா குரங்குகளின் பக்கத்தில் அமர்ந்தவாறு உள்ளார். இந்தப் புகைப்படம் அதிகமான ரசிகர்களால் விரும்பப்பட்டு அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுவருகிறது.

த்ரிஷா புகைப்படங்கள்

த்ரிஷா புகைப்படங்கள்

இன்றைய தினம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லியோ படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். அவரது மிரட்டலான லுக் மற்றும் நடிகர் விஜய்யின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், தயாரிப்புத் தரப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில், த்ரிஷாவும் தன்னுடைய பங்கிற்கு புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X