நயன்தாராவின் 'அறம்' படத்தில் இதெல்லாம் சுத்தமா பிடிக்கல - பிரபல நடிகை அதிரடி ட்வீட்!
சென்னை : கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான படம் 'அறம்'. இந்தப் படம் அழுத்தமான கதையால் ரசிகர்களிடத்தில் பாராட்டுகளைப் பெற்றது.
அரசைக் கேள்வி கேட்கும் விதத்தில் இருந்தாலும் பிரச்சார நெடி இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் மட்டும் ரூ. 1 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது 'அறம்' திரைப்படம்.
இப்படத்தை அண்மையில் பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அறம்' படம் பற்றி ட்வீட் செய்துள்ளார்.
அறம் பார்த்தேன்
"அறம் படம் பார்த்தேன். கலெக்டர் ரோலில் நயன்தாராவின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர். நயன்தாரா சேலையில் மிகவும் அழகாக இருக்கிறார்" என ட்வீட் செய்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
பிடிக்காத விஷயம்
படத்தில் எனக்குப் பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவது விஷயம், படத்தின் இறுதியில் தங்கையை காப்பாற்றிய அண்ணன் தான் ஹீரோ... ஆனால், அவனை கொண்டாவில்லை என்பது வருத்தம்.

நயன்தாரா காலில் விழவேண்டுமா
பிடிக்காத இரண்டாவது விஷயம் குழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு மருத்துவ உதவி செய்யாமல் நயன்தாரா காலில் விழ வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
லேடி சூப்பர்ஸ்டார் வேண்டாமே
ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். 'லேடி சூப்பர்ஸ்டார்' எனும் சுமையை நயன்தாரா தலையில் வைக்கவேண்டாம். இந்தப் பட்டத்திற்காக அவர் சில கதாபாத்திரங்களை ஏற்கவேண்டி இருக்கும். அது அவரது திறமையையும், நடிப்பையும் பாதிக்கும். எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











