விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. மற்றொரு காருடன் மோதல்.. அதிகாரி உட்பட 3 பேர் பரிதாப பலி!
பெங்களூரு: பிரபல நடிகையின் கார் மோதிய விபத்தில் பெண் அதிகாரி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகை உமாஶ்ரீ. ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்தார்.

நேருக்கு நேர் மோதல்
இவருக்குச் சொந்தமான கார், கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடக மாநிலம் கதக்கில் இருந்து உப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச் சென்றார். ஆனால் நடிகை உமாஸ்ரீ காரில் இல்லை. பாண்டிவாடா பகுதியில் சென்ற போது, இவர் காரும் எதிரில் வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதின.

முன்பகுதி நொறுங்கியது
மோதிய வேகத்தில் இரண்டு காரின் முன்பகுதி நொறுங்கியது. உமாஶ்ரீ கார் டிரைவர் சிவக்குமார் காயத்துடன் தப்பினார். மற்றொரு காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பல்லாரி நோக்கி
போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். உமாஶ்ரீ, காருடன் விபத்தில் சிக்கிய கார், உப்பள்ளியில் இருந்து பல்லாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. சுகாதார அதிகாரி டாக்டர் ஸ்மிதா குட்டி என்பவருக்கு சொந்தமான கார் அது என்பது தெரிய வந்தது.

விபத்து சம்பவம்
இந்த விபத்தில் ஸ்மிதா குட்டியின் தாய் ஷோபா குட்டி, டிரைவர் சந்தீப் ஆகியோர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தத ஸ்மிதா குட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











