ஓவர் சரக்கு.. போதையில் தட்டுத்தடுமாறி நடந்த நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல பாலிவுட் தொலைக்காட்சி நடிகை ஓவராக சரக்கு அடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாமல் தட்டுத்தடுமாறிய நிலையில் அவரை அவருடைய உதவியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியயது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் விதவிதமான அதிலும் விவகாரமான உடைகளை அணிந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட ஆடை அணிவது, பிளாஸ்டிக் பைகளை உடலில் சுற்றிக் கொள்வது, சின்னக் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், செல் போனை மார்பில் மறைத்தபடி வருவது. இப்படி எந்த பொருட் கையில் கிடைக்கிறதோ அதை வைத்து ஆடைகளை அணிந்து தனது ரசிகர்களை சுத்தலில் விடுவது உர்ஃபி ஜாவேத்தின் ஸ்டைல்.

பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத்: இவர் என்னத்தான் கன்றாவியாக டிரஸ் போட்டாலும், அதை ரசித்து பார்ப்பதற்கும், கமெண்டுகளை பதிவு செய்வதற்கும் என்றே தணிக்கூட்டம் ஒன்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மணியும் விவகாரமான உடை அணிவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
என்ன கன்றாவிடா இது: அப்படித்தான் அண்மையில் இவர் வித்தியாசமான உடையில் வருகிறேன் என்று, சூரிய கிரகத்தை இடுப்பில் சுத்தவிட்டிருந்தார். அதாவது தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், வடிவேலு ஒரு படத்தில் இடுப்பில் கூடையை கட்டிக்கொண்டு வருவாரே அது போல, கறுப்பு நிற உடையில், இடுப்பில், கண்ணாடி குடுவையை கட்டிக்கொண்டு, அதற்குள் சூர்ய கிரகத்தை வைத்திருந்தார். இதில் ஹைலைட் என்னவென்றால், லைட் போட்டதும் அந்த சூர்ய கிரகணம் அனைத்தும் சுற்றியது தான். இப்படி வித்தியாசமா எதையாவது செய்து இணையத்தில் பணம் சம்பாதித்து வருகிறார் அம்மணி.
ஓவர் சரக்கு: இந்நிலையில் உர்ஃபி ஜாவேத் சரக்கு அடித்துவிட்டு நடக்கவே முடியாமல் தள்ளாலடி வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இரவு நடைபெற்ற பிரைவேட் பார்ட்டிக்கு சென்ற உர்ஃபி, முட்ட முட்ட குடித்துவிட்டு அவரால் நடக்கவே முடியவில்லை. இதையடுத்து தோழிகள் அவரை காரில் ஏற்றிவிட்டனர். அப்போது உர்ஃபி ஜாவேத்திடம் பத்திரிக்கையாளர் ஏதோ கேட்க, அவரும் போதையில் குலறினார். இதைத்தொடர்ந்து தோழிகள், எதுவும் பேசாதே என்று அதட்டி, அவரின் உடையை சரி செய்து காரில் அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இணையத்தில் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஓவர் சரக்கு உடம்புக்கு ஆகாது என்று உர்ஃபியை கண்டபடி திட்டி வருகின்றனர். ஏற்கனவே பாலிவுட்டில் போதை கலாச்சாரம் தலை விரித்து ஆடி வரூம் நிலையில், உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











