இது தான் ட்ரெஸ்லையே சீன் காட்றதா? போட வேண்டியத போடுமா? கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல பாலிவுட் தொலைக்காட்சி நடிகை ஓவராக சரக்கு அடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாமல் தட்டுத்தடுமாறிய நிலையில் அவரை அவருடைய உதவியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியயது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். விதவிதமான உடைகளை விவகாரமான அணிந்து கொண்ட டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட ஆடை அணிவது, பிளாஸ்டிக் பைகளை உடலில் சுற்றிக் கொள்வது, சின்னக் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், செல் போன், கயிறு, பேப்பர் என இப்படி எந்த பொருட் கையில் கிடைக்கிறதோ அதை வைத்து ஆடைகளை அணிந்து தனது ரசிகர்களை சுத்தலில் விடுவது உர்ஃபி ஜாவேத்தின் வழக்கம்.

உர்ஃபி ஜாவேத்: என்னத்தான் கன்றாவியாக உடை அணிந்து வந்தாலும், அதை ரசித்து பார்ப்பதற்கும், அழகாக இருக்கிறது என்று கமெண்டுகளை பதிவு செய்வதற்கும் என்றே தனிக்கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால், இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சொல்வதால், அம்மணியும் தொடர்ந்து அதே போல, விவகாரமான ஆடைகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளார்.

திட்டும் இணைவாசிகள்: அண்மையில் இவர் வித்தியாசமான உடையில் வருகிறேன் என்று, வெறும் கயிற்றை சுற்றிக்கொண்டு வந்து நின்றார். அந்த உடையே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு, சூரிய கிரகத்தை இடுப்பில் சுத்தவிட்டிருந்தார். அதாவது தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், வடிவேலு ஒரு படத்தில் இடுப்பில் கூடையை கட்டிக்கொண்டு வருவாரே அது போல, கறுப்பு நிற உடையில், இடுப்பில், கண்ணாடி குடுவையை கட்டிக்கொண்டு வந்தார். தற்போது இவர், முன்னாடி ஒரு திரையில் படம் ஓடுவது போல, ஒரு உடையை அணிந்து வந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது தான் ட்ரெஸ்லையே சீன் காட்றதா? என்றும் முதலில் போட வேண்டியதை போடுமா? என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் உர்ஃபி ஜாவேத்தை ஐந்து மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











