இப்பதானே அந்த கட்சியில் சேர்ந்தாரு.. ரூ.3.75 கோடிக்கு புதிய அலுவலகம் வாங்கிய பிரபல நடிகை!
மும்பை: பிரபல நடிகை ரூ.3.75 கோடியில் புதிய அலுவலகம் ஒன்றை வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். இந்தியில் ரங்கீலா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்தி தவிர, தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

கமலின் இந்தியன்
தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில்
நடித்துள்ள ஊர்மிளா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

திடீர் விலகல்
இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தோற்றதாகவும் அப்போது கூறியிருந்தார். பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

மர்மநபர்கள் முடக்கினர்
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அந்தக் கட்சி, சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் அவர். சமீபத்தில் அவருடைய இன்ஸ்டா கணக்கை மர்மநபர்கள் சிலர் முடக்கினர். பின்னர் அது மீட்கப்பட்டது.

ட்ரோலர்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் தன் கணவர் மோஷின் அக்தர் மற்றும் அவர் குடும்பத்தினரை ட்ரோலர்கள் கடுமையாக தாக்கி வருவதாக அவர் வருத்தத்துடன் கூறியிருந்தார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், என் கணவர் பயங்கரவாதி என்றும் பாகிஸ்தானியர் என்றும் அழைக்கப்பட்டார். எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று ட்ரோலர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

புதிய அலுவலகம்
இவர் இப்போது புதிய அலுவலகம் ஒன்றை வாங்கியுள்ளார். மும்பை கர் பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றின் 6 வது மாடியில் இந்த அலுவலகத்தை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 3.75 கோடியாம். டிசம்பர் 28 ஆம் தேதி இதற்காக பத்திரப்பதிவு முடிந்ததாக மும்பை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











