Vijayakanth: ஊர்வசியுடன் நடிக்க மறுத்த கேப்டன் விஜயகாந்த்.. அப்படி என்ன செஞ்சாங்க ஊர்வசி?

சென்னை: நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. தனது இயல்பான நடிப்பினால் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்று இவரைக் கூறலாம். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டும் தனது அனுபவத்தைக் கொண்டும் அட்டகாசமாக நடிப்பவர் இவர். இவர் முதன்மைக் கதாபாத்திரமான நடித்த ஜே. பேபி படத்தில் இவரது நடிப்பினை பலரும் பாராட்டினர். இவர் கேப்டன் விஜய்காந்த் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

நடிகை ஊர்வசி 80களின் இறுதியில் இருந்து தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவரது நடிப்பிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக பாக்கியராஜ் படங்களில் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறும்பான வசனங்களை இவர் பேசும்போது ரசிக்காதவர்கள் இல்லை. அதேநேரத்தில் இவர் ஒரு சீரியஸான காட்சியில் நடிக்கும்போது ரசிகர்களை முழுக்க முழுக்க தன் வசப்படுத்திவிடும் நடிப்பினைக் கொண்டுள்ள நடிகையாக இன்றைக்கும் உள்ளார்.

urvashi vijayakanth urvashi interview

கடைசியாக மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு படத்தில் இவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. நடிகை ஊர்வசி எந்த அளவுக்கு கலகலப்பான நடிகையோ அதே அளவிக்கு அழுத்தமான நபர் என்றும் கூறலாம். நடிப்பினால் தனது சகோதரிகளின் திருமணத்திற்கே விருந்தினர்போல கடைசி நேரத்தில் கலந்து கொண்டது குறித்தெல்லாம் மிகவும் வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

விஜயகாந்த் மறுப்பு: இதுமட்டும் இல்லாமல் இவர் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் குறித்து பேசியது இணையத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக விஜயகாந்த் தன்னுடன் நடிக்க மறுத்தார் எனக் கூறியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஊர்வசி பேட்டி ஒன்றில் பேசும்போது, " நான் விஜயகாந்த் சாருடன் நடிக்க கமிட் ஆகிவிட்டேன். படத்தில் நடிக்கும்போது விஜயகாந்த் சார் என்னுடன் காதல் காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

urvashi vijayakanth urvashi interview

காதல் காட்சிகள்: காரணம் அவர் என்னை தங்கச்சி என்று அழைத்து வந்தார். நானும் அவரை அண்ணா என்று அழைத்து வந்தேன். காதல் காட்சிகளில் நடிக்கும்போது அவர் என்னைப் பார்க்கவே மாட்டார். மாறாக வேறு எங்காவது பார்வையை வைத்துக் கொண்டு முகத்தை மட்டும் என் பக்கம் வைத்திருப்பார். நான் அவருடன் இரண்டு, மூன்று படங்களில் நடித்துள்ளேன். மேலும் அவருடன் நடிக்கும்போது அவர் கருப்பாகவும் நான் வெள்ளையாகவும் இருப்பதையும் அவர் கிண்டல் அடிப்பார்.

பாதுகாப்பு: அதேபோல் அவரது தயாரிப்பு நிறுவனத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளேன். அவர் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றால் நாம் படப்பிடிப்புத் தளத்திலும் படப்பிடிப்புக்கு வெளியேயும் பாதுகாப்பாக இருக்கலாம். விஜயகாந்த் சார் சிறப்பாகவே சமைப்பார். அவர் சமையல் செய்யும் விதமே முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். அவரது தயாரிப்பு படத்திலும் சாப்பாடு பிரமாதமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X