Urvashi: அந்தப் படம் பண்ணும்போது எனக்கு மெச்சூரிட்டி இல்லை.. கன்வின்ஸ் பண்ணிதான் நடிக்க வச்சாரு!
சென்னை: நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. தனது இயல்பான நடிப்பினால் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்று இவரைக் கூறலாம். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டும் தனது அனுபவத்தைக் கொண்டும் அட்டகாசமாக நடிப்பவர் இவர். இவர் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்த ஜே. பேபி படத்தில் இவரது நடிப்பினை பலரும் பாராட்டினர். இந்நிலையில் இவர் தான் நடித்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகை ஊர்வசி 80களின் இறுதியில் இருந்து தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவரது நடிப்பிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக பாக்கியராஜ் படங்களில் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறும்பான வசனங்களை இவர் பேசும்போது ரசிக்காதவர்களே இல்லை. அதேநேரத்தில் இவர் ஒரு சீரியஸான காட்சியில் நடிக்கும்போது ரசிகர்களை முழுக்க முழுக்க தன் வசப்படுத்திவிடும் நடிப்பினைக் கொண்டுள்ள நடிகையாக இன்றைக்கும் உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் அம்மாவாக சிறப்பாக நடித்திருந்தார். சூர்யாவுடன் போனில் பேசும் காட்சியில் அவர், " விட்டுதாய்யா" எனக்கூறும்போது அழுகாதவர்கள் அல்லது நெகிழ்ந்து போகாதவர்களே இல்லை. அதேபோல் ஜே.பேபி படத்தில் தனது இளைய மகன் தினேஷிடம் திட்டும் அடியும் வாங்கிவிட்டு, மீண்டும் அவரது வீட்டிற்கே சென்று, 'பசிக்குதுய்யா' என கேட்கும் காட்சி பலரையும் உருகவைத்தது.

ஊர்வசி: இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக இவர் நடிகர் ஜீவாவின் அம்மாவாக சிவா மனசுல சக்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, " சிவா மனசுல சக்தி படத்தில் நடிக்க எனக்கு உடன்பாடே இல்லை. மேலும் அந்தப் படத்தில் நடிப்பதற்கான மெச்சூரிட்டி எனக்கு இல்லை. ஆனால் படத்தின் இயக்குநர் ராஜேஷ்தான் என்னை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார்.

எதார்த்தமான நடிப்பு: மேடம் உங்களோட எதார்த்தமான நடிப்புதான் தேவை. நீங்கள் மனதளவில் எல்லாம் தயாராக வேண்டாம் எனக் கூறினார். ஆனால் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் எல்லாம் மகன் பேசுவதை புரியாமல் நடிக்கும் அம்மாவாக நடித்திருப்பேன். அந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது எனக்கு இது வொர்க் அவுட் ஆகுமா என சந்தேகம் இருந்தது. ஆனால் தியேட்டரில் அந்தக் காட்சியை மக்கள் கொண்டாடினார்கள். சில காட்சிகள் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்பதை கணிக்கமுடியாது இல்லையா" என பேசியுள்ளார்.

SMS 2: சிவா மனசுல சக்தி படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. படத்தில் ஜீவா, சந்தானம், அனுயா பகவத், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை எம். ராஜேஷ் இயக்கியுள்ளார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றது.



Click it and Unblock the Notifications











