ப்பா.. என்னா அழகு.. பச்சை நிற லெஹாங்காவில் சொக்க வைக்கும் அண்ணாச்சி பட நடிகை!
சென்னை: நடிகை ஊர்வசி ரவுட்டேலா பச்சை நிற லெஹாங்கா உடையில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னா அழகு என ஜொள்ளு விட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவுட்டேலா. ஏராளமான அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.

விர்ஜின் பானுபிரியா
தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹேட் ஸ்டோரி 4, பாகல்பான்டி ஆகிய படங்களில் நடித்தார் ரவுட்டேலா. கடைசியாக விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்தார்.

லெஜன்ட் சரவணா
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. தற்போது பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி. அதேபோல் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியா
இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஊர்வசி ரவுட்டேலா. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. நடிகை ஊர்வசி ரவுட்டேலா சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார்.

தேசிய விருது
அண்மையில் மகாராஷ்டிர ஆளுநர் கையால் விருது வாங்கிய போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் ஊர்வசி ரவுட்டேலா. பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பிரபலங்களுக்கு வழங்கப்படும் ஸ்ரீசக்தி தேசிய விருது நடிகை ஊர்வசி ரவுத்டேலாவுக்கு வழங்கப்பட்டது.

க்யூட் போட்டோஸ்
விருது பெற்ற நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான போட்டோக்களை ஷேர் செய்து ஸ்கோர் செய்துள்ளார் ஊர்வசி ரவுட்டேலா.

அவ்வளவு அழகு..
அந்த போட்டோவில் பச்சை மற்றும் நீல நிற காம்பினேஷனில் லெஹாங்கா அணிந்துள்ள ஊர்வசி ரவுட்டேலா கழுத்து காது, கைகள் என அணிகலன்களை அணிந்துள்ளார். இந்த போட்டோக்களில் பார்க்கவே அவ்வளவு அழகாக உள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.

வாயை பிளந்த ரசிகர்கள்
ஊர்வசி ரவுட்டேலாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்ன அழகு என வாயை பிளந்துள்ளனர். இந்த க்யூட் போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











