கையில் சரக்கு.. வாயில் ரயில் போல புகை.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை கையில் சரக்குடனும் வாயில் புகையுடனும் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரவுட்டேலா. ஏராளமான அழகிப் போட்டிகளில் பங்கேற்று பல பட்டங்களை வென்றிருக்கிறார்.
மாடலிங்கில் அசத்தி வந்த ஊர்வசி ரவுட்டேலா பாலிவுட் படங்களிலும் பிஸியாகி விட்டார். படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை காட்டி வருகிறார்.

த்ரோபேக்
பல மியூஸிக் ஆல்பங்களிலும் தோன்றியிருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா. அதோடு வெப் சீரிஸ்களும் அவருக்கு அத்துப்படி.
தற்போது லாக்டவுன் என்பதால் ரசிகர்களின் டைம் லைனில் இருக்க விரும்பிய ஊர்வசி ரவுட்டேலா தன்னுடைய பழைய போட்டோக்களை த்ரோபேக் என ஷேர் செய்து உசுப்பேற்றி வருகிறார்.

சரக்கு பாட்டீல்
அந்த வகையில் ஊர்வசி ரவுட்டேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஷேர் செய்திருக்கும் போட்டோ ரசிகர்களை மிரள செய்திருக்கிறது. அதாவது தனது ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோதான் அது. ஷுட்டிங் ஸ்பாட்டில் சரக்கு பாட்டீல் மற்றும் கண்ணாடி கிளாஸுடன் அமர்ந்துள்ளார் ஊர்வசி ரவுட்டேலா.

ரயில் போல புகை
வாயில் சிகரெட்டை வைத்திருக்கும் ஊர்வசி ரவுட்டேலா அப்படியே புகைவிட பயிற்சி எடுக்கிறார். பயிற்சிலேயே ரயில் வண்டியை போல குபுகுபுவென புகையை விடுகிறார் ஊர்வசி ரவுட்டேலா. புகைப்பிடிக்க தெரியாததால் இந்தக் காட்சிக்காக இயக்குநரிடம் திட்டு வாங்கியதாக கூறியுள்ள ஊர்வசி ரவுட்டெலா ஸ்மோக்கிங் உடல் நலத்திற்கு கேடும் என்றும் தெரிவித்துள்ளார்.

திணறும் ரசிகர்கள்
ஊர்வசி ரவுட்டேலாவின் இந்த சர்ச்சைக்குரிய காட்சி கல் பேன் கய் என்ற மியூஸிக் வீடியோவுக்காக எடுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோவை தற்போது ஷேர் செய்து ரசிகர்களை திணறடித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆஸம் என வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











