பால் போல் மேனி.. கப்பல் போல் கார்.. டைட்டானிக்கு பாடலுக்கு ஆட்டம் போடும் அண்ணாச்சி பட ஹீரோயின்!
சென்னை: நடிகை ஊர்வசி ரவுட்டெலா டைட்டானிக் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவுட்டேலா. ஏராளமான அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.

விர்ஜின் பானுபிரியா
தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹேட் ஸ்டோரி 4, பாகல்பான்டி ஆகிய படங்களில் நடித்தார் ரவுட்டேலா. கடைசியாக விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்தார்.
லெஜன்ட் சரவணா
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. தற்போது பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி. அதேபோல் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியா
இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஊர்வசி ரவுட்டேலா. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. நடிகை ஊர்வசி ரவுட்டேலா சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார்.
பீச்சில் இளைஞருடன்
அண்மையில் பீச்சில் இளைஞர் ஒருவருடன் அவர் படுநெருக்கமாக நடத்திய போட்டோ ஷூட் சமூக வைலதளங்களில் பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் உங்களின் பாய் ஃபிரண்டா என கேட்டு திக்குமுக்காடச் செய்தார்

டைட்டானிக்கு பாடலுக்கு
இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவுட்டெலா தற்போது சில போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார். அதாவது, கப்பல் போன்ற கார் பின்னால் நிற்க டைட்டானிக் பாடலுக்கு க்யூட் ரியாக்ஷன் கொடுத்துள்ளார் ஊர்வசி ரவுட்டெலா.

பால் போன்ற மேனி
வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போன்று இருக்கும் ஊர்வசி ரவுட்டெலாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட், பால் போன்ற மேனி என வாய்க்கு வந்தப்படியெல்லாம் வர்ணித்து வருகின்றனர்.

செம்ம க்யூட்
இதேபோல் வானவில் போன்ற பல நிறங்கள் கொண்ட லூப் வைத்த கவுனில் அழகு பதுமையாய் போஸ் கொடுத்துள்ளார் ஊர்வசி ரவுட்டெலா. ஊர்வசி ரவுட்டெலாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என வாயை பிளந்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











