பெண்கள் துணைக்கு ஒரு ஆளை கூட கூட்டிட்டு வந்தால்.. பிரச்சனையே வராது.. நடிகை ஊர்வசி பேச்சு!
சென்னை: மலையாள சினிமா துறையில் அதிகரித்துள்ள பாலியல் தொல்லைக்கு முடிவுகட்டும் விதமாக முதலமைச்சர் முன்னெடுத்த நடவடிக்கையின் பேரில் நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல நடிகைகளிடம் பெற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் வெளியான அறிக்கை தற்போது மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறது.
மலையாள திரையுலகில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற பாலியல் தொல்லை விவகாரங்கள் அதிகளவில் இருக்கிறதா என்கிற கேள்விக்கு செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை ஊர்வசி மலையாளத்தில் மட்டுமில்லை, தமிழ் சினிமா, பாலிவுட் சினிமா என அனைத்து இடங்களிலும் இந்த பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், மலையாள நடிகைகள் போல்டானவங்க என்பதால் தான் இப்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளதாக கூறியுள்ளார்.
மோகன்லால் ராஜினாமா: மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் உள்பட அவரது குழுவில் இருந்த 17 சினிமா பிரபலங்கள் மொத்தமாக AMMA என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்ய காரணமாகவே இந்த ஹேமா குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட இளைஞர்கள் மூத்த நடிகர்களால் மலையாள சினிமாவை சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்றும் பாலியல் தொல்லைக்கு சினிமா துறையினர் ஒன்றாக திரண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பேசிய நிலையில், இந்த அதிரடி முடிவை மோகன்லால் எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
ரகசியம் காக்கப்படும்: மலையாள திரையுலகில் தலைவிரித்தாடும் பாலியல் தொல்லைக்கு எதிராக உண்மையை வெளியே வந்து சில நடிகைகள் வெளிப்படையாக சொல்லி வரும் நிலையில், அவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என ஹேமா குழு உறுதியளித்த நிலையில், பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறியதாக நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.

போல்டானவங்க: மலையாள சினிமாவில் உள்ள நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் நடிகைகளிடம் அத்துமீறி நடப்பதும், வாய்ப்பு வேண்டுமென்றால் ரூமுக்கு வா என அழைத்து பாலியல் பலாத்காரம் செய்வதுமாக உள்ளதா என்கிற கேள்விக்கு பதில் அளித்த நடிகை ஊர்வசி, மலையாள திரையுலகில் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் திரையுலகை தாண்டி அலுவலகங்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் தொல்லை பிரச்சனை நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், மலையாள நடிகைகள் ரொம்பவே போல்டானவங்க நாம் சந்தித்த பிரச்சனையை இனிமேல் எந்த பெண்களும் சந்திக்க கூடாது என்றே முன்வந்து வாய் திறந்து சொல்லியிருக்காங்க என்றார்.
பெண்கள் துணைக்கு ஆள் கூட்டிட்டு வரணும்: மேலும், இதுபோன்ற பாலியல் தொல்லை நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிக் கொண்டு சினிமா ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்றும் தனது கருத்தை நடிகை ஊர்வசி சொல்லியிருக்கிறார். பெண்கள் தனியாக சினிமா வாய்ப்புத் தேடி சென்றால், இதுபோன்ற சிக்கல்கல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தான் நடிக்க வந்த காலத்திலேயே சீனியர் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்தெல்லாம் பேசியிருக்காங்க என்றார்.


Click it and Unblock the Notifications











