வாரே வா.. அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்.. முதன்முதலாக மகளின் போட்டோவை வெளியிட்ட ஊர்வசி!

சென்னை: நடிகை ஊர்வசி முதன் முறையாக தனது மகளின் போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாளப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு கே பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்தார்.

முதல் படத்திலேயே கண்ண தொறக்கணும் சாமி...கை பிடிக்கணும் சாமி என ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

actress urvashi shared her daughter kunjatta photos on social media

நடிகை ஊர்வசி: முந்தானை முடிச்சு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். தொடர்ந்து ஹிட் படத்தில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக மாறிய ஊர்வசி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

கணவரை பிரிந்தார்: படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின் நடிகர் மனோஜ்-ஊர்வசிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இந்த தம்பதிகளுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில், மகளை மனோஜ் அழைத்துச் சென்றுவிட்டார்.

actress urvashi shared her daughter kunjatta photos on social media

இரண்டாவது திருமணம்: அதன்பின் நடிகர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதே போல நடிகை ஊர்வசியும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு 46 வயதில் ஒரு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

actress urvashi shared her daughter kunjatta photos on social media

அம்மாவை மிஞ்சிடும் அழகு: இந்நிலையில் இத்தனை நாள் தந்தையின் கண்காணிப்பில் இருந்து வந்த குஞ்சட்டா தற்போது வளர்ந்துவிட்டதால், ஊர்வசியை அவ்வப்போது சந்தித்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஊர்வசி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போல என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X