அந்தகன் படத்தில் நடிக்க வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த ஊர்வசி! காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஆந்தம் புரோமோவை நடிகர் விஜய் வெளியிட்டார். இந்நிலையில் படத்தின் ஆந்தம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசினர். குறிப்பாக நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ' பிரசாந்த்திற்கு கிடைத்ததைப் போல் அப்பா எனக்கு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' எனக் கூறினார். மேலும் தான் டப்பிங் பேச வந்தபோது எனக்கு பேசிய தொகையை விடவும் இரண்டு மடங்கு தொகையை கொடுத்ததாகவும், ஒருநாள் தனது போன் தொலைந்துவிட்டது, அப்போது எனக்கு ஐ போன் 13 மேக்ஸ் ப்ரோ போன் வாங்கிக் கொடுத்தார் எனவும் தியாகராஜன் குறித்து பேசினார்.

Urvasi Prasanth Andhagan

அதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே, கொச்சினில் இருந்து விமானத்தில் வந்த நடிகை ஊர்வசி, நிகழ்ச்சியில் இறுதி நேரத்தில் கலந்து கொண்டு மிகவும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். நடிகை ஊர்வசி விழாவில் கலந்து கொள்ள வந்ததும், அவரை பேசச் சொன்னார் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன்.

ஆச்சரியம்: மேலும் ஊர்வசி பேசுவதற்கு முன்னர், படத்தின் டப்பிங்கிற்காக ஊர்வசி வந்திருந்தார். வந்தவர் கையோடு ஒரு பெரிய கவர் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த கவரினை என்னிடம் கொடுத்து, " இந்த படத்தில் நடித்ததற்காக எனக்கு நீங்கள் ரொம்பவே அதிக சம்பளம் கொடுத்து விட்டீர்கள். எனவே தயவு செய்து இந்த பணத்தை நீங்கள் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா என எனக்கே ஆச்சரியமாக இருந்தது" எனக் கூறினார்.

Urvasi Prasanth Andhagan

மாமியார் மறைவு: அதன் பின்னர் பேசிய நடிகை ஊர்வசி, நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டேன். படம் இன்னும் ஐந்து தினங்களில் தொடங்கவுள்ளது. அந்த காலகட்டத்தில் தான் எனது மாமியார் உயிர் இழந்துவிட்டார் என எனது கொச்சினில் இருந்து காரில் போய்க்கொண்டு இருக்கின்றேன். இப்படியான நிலையில் எனக்கு தியாகராஜன் சார் போன் செய்து இன்னும் ஐந்து நாட்களில் படப்பிடிப்பு தொடங்குகின்றது எனக் கூறினார்.

அதிக சம்பளம்: நான் உடனே எனது நிலைமையைச் சொன்னேன். அவர் உடனே, நீங்க அதெல்லாம் பாத்துட்டு வாங்க ஊர்வசி எனக் கூறினார். இந்த படத்தில் நான் நடித்த நேரம் என்பது குறைவு. ஆனால் தியாகராஜன் சார் எனக்கு அதிக சம்பளம் கொடுத்துவிட்டார். இதனை எனது கணவரிடம் கூறினேன். மேலும் நான், இந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிடலாம் என முடிவு செய்தது குறித்தும் கூறினேன். அவரும் சரி எனக் கூறினார்.

Urvasi Prasanth Andhagan

பிரஸ் மீட்: யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருப்பிக் கொடுத்ததை, இப்படி வெட்ட வெளிச்சமாக அனைத்து ஊடகங்கள் முன்னிலையிலும் கூறுவார் எனத் தெரிந்திருந்தால் நானே பிரஸ்மீட் வைத்து கொடுத்திருப்பேன் என சிரித்துக் கொண்டே கூறினார். ஊர்வசியின் இந்த பேச்சினைக் கேட்டு அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X