எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் படங்களில் நடித்தவர்..பிரபல நடிகை உஷா ராணி காலமானார்.. திரையுலகம் இரங்கல்!

By

சென்னை: எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ஆகியோருடன் நடித்துள்ள பிரபல நடிகை உஷா ராணி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 62.

தமிழில், அரங்கேற்றம், என்னைப் போல் ஒருவன், பட்டிக்காட்டுப் பொன்னையா, சிவந்த கண்கள் உட்பட சுமார் 50 படங்களில் நடித்துள்ளவர் உஷா ராணி.

குழந்தை நட்சத்திரமாக தனது 12 வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர் உஷா ராணி.

சிறுநீரகப் பிரச்னை

சிறுநீரகப் பிரச்னை

மலையாளத்தில் மட்டும் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ளார். 1966 ஆம் ஆண்டு முதல் 2004 வரை படங்களில் நடித்த உஷா ராணி, சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவருக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்தது. இதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி, பிரச்னை அதிகமானது.

மலையாள இயக்குனர்

மலையாள இயக்குனர்

இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்க இருக்கிறது. நடிகை உஷா ராணியின் மறைவை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மறைந்த நடிகை உஷா ராணியின் கணவர் என்.சங்கரன் நாயர், பிரபல மலையாள இயக்குனர் ஆவார். மலையாளத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஜயம், பிரமீளா நடித்த தம்புராட்டி, பிரேம் நஸிரின் தரு ஒரு ஜென்மம் கூடி உட்பட சுமார் 40 படங்களை இயக்கி உள்ளார் சங்கரன் நாயர். மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரை காதலித்தார் உஷாராணி.

காதல் திருமணம்

காதல் திருமணம்

தன்னைவிட 30 வயது அதிகமான அவரைக் காதலித்து, 1971 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது இந்த திருமணம் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கரன் நாயர், கடந்த 2005 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார். மறைந்த உஷா ராணியின் உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X