விஜய் சேதுபதி என் புள்ள.. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் பக்கத்தில் இருக்கச் சொல்லி இருக்கேன் - வடிவுக்கரசி

சென்னை: நடிகை வடிவுக்கரசி தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக வலம் வருகிறார். தற்போது அதிகம் சீரியலிலும் தகுந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவுக்கரசி நடிகர் விஜய் சேதுபதி குறித்து கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்கும் சினிமாவில் நடிப்பதை கடந்து நல்ல பிணைப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான விஷயம் தான். சிலர் நல்ல நண்பர்களாக மாறிவிடுகிறார்கள். சிலர் உடன் பிறப்புகளாக மாறிவிடுகிறார்கள். சிலர் காதலர்களாகவும் சிலர் வாழ்க்கைத் துணைகளாகவும் மாறிவிடுகிறார்கள். சிலர் நல்ல எதிரிகளாகக் கூட மாறிவிடுகிறார்கள். இது இயல்பானதுதான். வேலை செய்யும் இடத்தில் இப்படியான உறவுகள் அமைவது என்பது இயல்பானதுதான்.

Vadivukarasi Vijay Sethupathi Train Movie

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை விட மற்றொருவர் சிறப்பாக நடித்து இருக்க முடியாது எனக் கூறும் அளவிற்கு, வேறு ஒரு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் யோசித்துப் பார்க்கவே, முடியாத அளவிற்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

Vadivukarasi Vijay Sethupathi Train Movie

விஜய் சேதுபதி: இப்படியான நிலையில் விஜய் சேதுபதி குறித்து நடிகை வடிவுக்கரசி கூறியுள்ள தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " விஜய் சேதுபதி என் புள்ள மாதிரி. விஜய் சேதுபதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு நாளைக்கு திடீர்னு ஏதாவது ஆகிவிட்டால் கூட எனக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என விஜய் சேதுபதியிடம் சொல்லி இருக்கேன். ஒரு காலத்தில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருந்தாரோ, அதுபோல எனக்கு இப்போது விஜய் சேதுபதி உள்ளார்" எனக் கூறியுள்ளார்.

Vadivukarasi Vijay Sethupathi Train Movie

டிரைன்: விஜய் சேதுபதி குறித்து வடிவுக்கரசி இவ்வாறு கூறியுள்ளது, சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிரைன் படம் வரும் மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார்.

Vadivukarasi Vijay Sethupathi Train Movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X