சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை..மகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கதறும் தாய்!

மும்பை : மகளின் தற்கொலைக்கு காரணமான தொழிலதிபருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என சீரியல் நடிகை வைஷாலி தாக்கரின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்

இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெடுந்தொடர் சாசுரால் சிமார் கா. இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்ததால், இந்த தொடர் தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

தமிழிலம் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்த தொடரில் முக்கிய ரோலில் நடித்தவர் தான் நடிகை வைஷாலி தாக்கர்.

நடிகை வைஷாலி தாக்கர்

நடிகை வைஷாலி தாக்கர்

நடிகை வைஷாலி தாக்கர் இந்தியில் பல சீரியல்கள் மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தூரில் தனது குடும்பத்துடன் வசிந்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

வீட்டுக்காரர் டார்ச்சர்

வீட்டுக்காரர் டார்ச்சர்

இதையடுத்து, வீட்டை ஆய்வு செய்த போலீசார், நடிகை வைஷாலி எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் வைஷாலி தனது பக்கத்து வீட்டுக்காரர் ராகுல் மற்றும் அவரது மனைவி திஷா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். எனது மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

காதலனிடம் மன்னிப்பு

காதலனிடம் மன்னிப்பு

நடிகை வைஷாலி தாக்கருக்கும் அவரது காதலன் மிதேஷூக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்கொலைக் கடிதத்தில், நடிகை வைஷாலி மிதேஷிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை வைஷாலி தாக்கூருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்ததால், ராகுல் நவ்லானி அவரை டார்ச்சர் செய்துள்ளார். இதனால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்

மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்

இந்நிலையில், வைஷாலியின் தாய் அனு கவுர், என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வரும் ஜனவரி மாதம் வைஷாலிக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தோம் அதற்குள் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. அத்தோடு ராகுலுக்கு தண்டனை கிடைத்தால் தான் எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X