Deivamagal team: மீண்டும் களமிறங்கிய தெய்வமகள் டீம்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!

சென்னை: சன் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான தெய்வமகள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு சிறப்பாக ரசிகர்களை கட்டிப்போட்டது.

தற்போது கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பாக ஒளிபரப்பாகி மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Actress Vani Bhojan and Shabnam joined together for the reels video

இந்தத் தொடரில் சத்யபிரியா கேரக்டரில் சத்யாவாக ரசிகர்களை ஆண்டு வந்தார் நடிகை வாணி போஜன்.

மீண்டும் இணைந்த தெய்வமகள் அக்கா -தங்கை: நடிகை வாணிபோஜனுக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்த தொடர் என்றால் அது தெய்வமகள் தான். சத்யா கேரக்டரில் ஏறக்குறைய 5 ஆண்டுகள் அவர் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். இந்த தொடரில் பிரகாஷ் கேரக்டரில் நடித்திருந்தார் நடிகர் கிருஷ்ணா. அவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தாலும் இந்த கேரக்டர் அவரது கேரியர் பெஸ்ட். தற்போது தெய்வமகள் தொடர், மறுஒளிபரப்பாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போதும் ரசிகர்களை கவர்ந்த தொடராக உள்ளது.

Actress Vani Bhojan and Shabnam joined together for the reels video

கடந்த 2013ம் ஆண்டில் துவங்கப்பட்ட தெய்வமகள் தொடர், தொடர்ந்து 2018ம் ஆண்டு வரை சக்சஸ்புல் தொடராக இருந்தது. தொடரில் ஃபினிஷிங் ஸ்கூல் முடித்தவராக அறிமுகம் செய்யப்பட்டார் வாணி போஜன். தொடர்ந்து தந்தையை இழந்து, திருமணம் நின்று, சொத்துக்களை இழந்து, தன்னுடைய தாய் மற்றும் தங்கைகளுக்கு பாதுகாவலாக இருக்கும் கேரக்டரில் அதிரடி காட்டியிருந்தார். தொடர்ந்து ஜெய்ஹிந்த் விசாஸ் என்ற பாரம்பரியமிக்க குடும்பத்திற்கு வாழ்க்கைப்படும் அவர் முரடனான பிரகாஷை மாற்றி நல்ல மனிதனாக்குவதும், குடும்பத்தின் மூத்த மருமகள் காயத்ரியின் சதித்திட்டங்களை கணவனுடன் இணைந்து முறியடிப்பதும் இந்தத் தொடரின் கதைக்களமாக அமைந்தது.

வெற்றிகரமான தொடராக சன் டிவிக்கும் இந்தத் தொடர் அமைந்தது. இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தத் தொடரின் டைமிங் மாற்றம் கூட அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த டீம் தொடர்பில்தான் உள்ளது. சமீபத்தில் இந்தத் தொடரின் ரீ யூனியன் நடத்தப்பட்டது. இதில் சத்யா, பிரகாஷ் கேரக்டர்களில் நடித்திருந்த கிருஷ்ணா, வாணி போஜன் தவிர்த்த மற்ற நடிகர்கள் பங்கேற்று தங்களது மலரும் நினைவுகளை ஷேர் செய்திருந்தனர்.

Actress Vani Bhojan and Shabnam joined together for the reels video

இந்தத் தொடரை தொடர்ந்து சில தொடர்களில் வாணி போஜன் நடித்திருந்தாலும், தெய்வமகள் அளவிற்கு அவருக்கு மற்ற தொடர்கள் பெயரை பெற்றுத் தரவில்லை. தற்போது தமிழில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார் வாணி போஜன். சமீபத்தில் பரத் ஜோடியாக அவர் நடித்திருந்த லவ் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தொடரில் சத்யா மற்றும் தாரணியாக, அக்கா -தங்கையாக நடித்தருந்த வாணி போஜன் மற்றும் சப்னம் இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்துள்ளனர். ஜூம்கா பாடலுக்கு இவர்களின் க்யூட் நடனத்தை பார்த்த ரசிகர்கள் சிறப்பான கமெண்ட்ஸ்களை அளித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த இவர்களின் சந்திப்பு க்யூட் நடனத்துடன் முடிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X