கொரோனாவிலிருந்து நம்மையும் காப்போம்... மற்றவர்களையும் காப்போம்... தடுப்பூசி போட்ட வாணி போஜன்
சென்னை : நடிகை வாணி போஜன் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து நம்மையும் காத்து மற்றவர்களையும் காப்போம் என்று தெரிவித்துள்ளர்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மலேசியா டூ அம்னீசியா நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா தாக்கம் மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரவலாக அனைவரும் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். திரைத்துறையினரும் தடுப்பூசி போட்டு அதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து அவர்களது ரசிகர்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

வாணி போஜன் தடுப்பூசி
இந்நிலையில் தற்போது நடிகை வாணி போஜன் தனது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் கொரோனாவிலிருந்து நம்மையும் காத்து மற்றவர்களையும் காப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான விமர்சனம்
தடுப்பூசி போடும்போது அவர் அச்சத்தால் தன்னுடைய முகத்தை எதிர்ப்புறம் திருப்பிக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் எளிமையான உடையில் சிறப்பாக உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் இயக்குநர் ராதாமோகன் டைரக்ஷனில் வெளிவந்த மலேசியா டூ அம்னீஷியா திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல பெயரை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
காமெடி படமாக வந்துள்ள இந்த படத்தில் வாணியின் கேரக்டர் பேசப்பட்டுள்ளது.அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் 60 படத்திலும் காசினோ, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். பகைவனுக்கு அருள்வாய் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











