Vani bhojan: என் ஹார்ட் வீக்கு செல்லம்.. வாணி போஜனின் அட்டகாசமான போட்டோஸ்!

சென்னை: ஒரு சாயலில் பார்ப்பதற்கு நயன்தாரா போல இருக்கும் நடிகை வாணி போஜன், இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து கொணடு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.இன்று நடிகை வாணி போஜன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்து, தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை வாணி போஜன். ஊட்டியை சேர்ந்த இவர், கல்லூரி படிப்பை முடித்த பிறகு வாணி போஜன் ஏர் ஹோஸ்டராக கிங்பிஷர் இண்டிகோ போன்ற பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங் துறைக்கு சென்றார்.

vani bhojan instagram photos

நடிகை வாணி போஜன்: அப்போது தான் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் முதன்முதலாக நடித்தார் வாணி போஜன். அதனை தொடர்ந்து, அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஓர் இரவு என்கிற ஹாரர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின், விஜய் டிவியில் ஆகா என்கிற சீரியலிலும் ஜெயா டிவியில் மாயா என்கிற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் வாணி போஜன். ஆனால், 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் இவர் நடித்த தெய்வமகள் சீரியல்தான் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அந்த சீரியலில்,சத்யா என்ற ரோலில் நடித்தார்.

சினிமாவில் பிஸி: அந்த சீரியலை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வாணி போஜன். அந்த கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மகான், மலேசியா முதல் அனிமேஷியா, மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, அஞ்சாமை என வருடத்திற்கு இரண்டு படத்தில் நடித்து வருகிறார் வாணி போஜன். எல்லா படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பது கிடைக்கவில்லை இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார் வாணி போஜன்.

vani bhojan instagram photos

ரசிகர்களுக்கு வாழ்த்து: இந்நிலையில்,வாணி போஜன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அழகான புடவையில் இருக்கும் போட்டோவை பதிவிட்டு வாழ்த்து சொல்லி உள்ளார். அதில், வினைகள் அகலட்டும், தடைகள் உடையட்டும், வெற்றிகள் குவியட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்... அன்புடனும் நட்புடனும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவிற்கு பலரும் லைக்குகளை குவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X