ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வனுடன் இணையும் சின்னத்திரை நயன்தாரா!

சென்னை: ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து நடிகை வாணி போஜன் மீண்டும் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வாணி போஜன், சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன், ரித்திகா சிங் லீடிங் ரோலில் நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

நாயகிகளுக்கு முக்கியத்துவம்

நாயகிகளுக்கு முக்கியத்துவம்

இந்தப் படத்தில் வாணி போஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வாணி போஜன் மீண்டும் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். வாணி போஜன் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களையே தேர்வு செய்து வருகிறார்.

மோகன் ராஜாவுடன்..

மோகன் ராஜாவுடன்..

அந்த வகையில் அறிமுக இயக்குநர் வெங்கட் இயக்கும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்துள்ளார் வாணி போஜன். வெங்கட், இயக்குநர் மோகன் ராஜாவுடன் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியவர்.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக

படம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. வாணி போஜன், பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரம்யா பாண்டியனும்..

ரம்யா பாண்டியனும்..

இதனை தொடந்து அரிசில் மூர்த்தி இயக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் இயக்குகிறது. இதில் பிக்பாஸ் ரம்யா பாண்டியனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X