Vani Bhojan: ஏன் இப்படி.. லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து காட்டமாக பதில் கொடுத்த வாணி போஜன்!
சென்னை: நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கி தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக உள்ளார்.
சமீபத்தில் பரத்துடன் வாணி போஜன் நடித்திருந்த லவ் படம் வெளியானது. ரொமாண்டிக் த்ரில்லராக வெளியான இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது.
அவர் நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ள நிலையில், அதுகுறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.

லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து காட்டமாக பதிலளித்த வாணி போஜன்: நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின்மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தத் தொடருக்கு முன்பும் பின்பும் அவர் சீரியல்களில் நடித்துள்ள போதிலும் தெய்வமகள் சத்யா கேரக்டர் அவரை தற்போது வரை ரசிகர்களின் இதயங்களில் இடம்பெற செய்துள்ளது. இந்தத் தொடர் ஏறக்குறைய 5 ஆண்டுகள் சன் டிவியில் ஒளிப்பரப்பான நிலையில், சத்யாவிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்காக காயத்ரி மீது கோபப்படாத ரசிகர்களே இருக்க முடியாது என்று கூறலாம்.
தற்போது இந்தத் தொடர் கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பாகி வருகிறது. இருந்தபோதிலும் வாணி போஜனை சந்திக்கும் ரசிகர்கள், அவருக்கு ஆறுதலாக பேசுவதாக அவரே பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அது நடிப்பு என்று தான் கூறியபோதிலும் அவர்கள் சமரசம் ஆகாமல், தொடரின் வில்லியாக நடித்த காயத்ரியை திட்டித் தீர்ப்பதாகவும் வாணி போஜன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அந்த தொடர் அளவிற்கு தனக்கு மற்ற எந்த தொடரும் வரவேற்பை பெற்றுத் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தத் தொடர் கொடுத்த புகழால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வாணி போஜனுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்தத் தொடர் தொடர்ந்து பல்வேறு விருதுகளையும் வாணி போஜனுக்கு பெற்றுத் தந்துள்ளது. தமிழில் ஓ மை கடவுளே படம் மூலம் அறிமுகமான வாணி போஜன், முன்னதாக தெலுங்கில் மீக்கு மாத்ரமே செப்தா என்ற படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தார். சமீபத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்த லவ் படம் வெளியாகி அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத்தந்தது.
தொடர்ந்து படங்களில் வாணி போஜன் நடித்து வருகிறார். அவர் நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தகவலை மறுத்துள்ள வாணி போஜன், ஒரு நடிகருடன் நடித்துவிட்டால் இதுபோன்ற விமர்சனங்கள் உடனடியாக பரப்பப்படுவதாகவும் வியூசிற்காக இப்படி பொய்யான தகவலை பரப்புவதா என்றும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். தொலைக்காட்சியில் தான் நடித்துக் கொண்டிருந்தபோது இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
தான் தன்னுடைய சொந்த முயற்சியில் முன்னேறி வருவதாகவும் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பதாகவும் வாணி போஜன் மேலும் கூறியுள்ளார். தனக்கு மற்றவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தான் அதிகமாக யோசிப்பேன் என்று பேசியுள்ள வாணி போஜன், அட்ஜெஸ்ட்மெண்ட் தான் பெரிய கதாநாயகி ஆக வேண்டும் என்ற அவசியம் தனக்கில்லை என்றும் காட்டமாக பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











