Vani Bhojan: என்னை ரிஜக்ட் பண்ணவங்களை நானும் ரிஜக்ட் பண்ணினேன்.. வாணி போஜன் பளீச்!

சென்னை: சன்டிவியின் தெய்வமகள் தொடரின் டைட்டில் கேரக்டரில் நடித்தவர் வாணி போஜன். ஏறக்குறைய 5 ஆண்டுகள் சத்யாவாக வீட்டிற்குள் ஒருவராக அவர் பாராட்டுக்களை பெற்றார்.

தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது முன்னணி நாயகியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வாணி போஜன். தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் இவரை காண முடிகிறது.

Actress Vani Bhojan recent interview about her cinema chances

தொலைக்காட்சியில் நடித்ததால் பறிபோன சினிமா வாய்ப்புகள்: சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் வாணி போஜன். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சத்யாவாக ரசிகர்களை கவர்ந்தவர் இவர். இந்தத் தொடர் இவருக்கு மற்ற சீரியல்களிலும் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. தமிழில் ஓ மை கடவுளே படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கொடுத்தது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் வாணி போஜன். நடிகர் பரத்துடன் இவர் நடித்துள்ள லவ் படம், வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. திருமணத்தையடுத்து கணவன் -மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பரத், வாணி போஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன், தான் மற்ற கதாநாயகிகளை தன்னுடைய போட்டியாக எப்போதுமே நினைத்ததில்லை என்று கூறியுள்ளார். குறிப்பாக டிவியிலிருந்து சினிமாவிற்கு வந்த பிரியா பவானி சங்கரை தன்னுடைய போட்டியாக நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருவது ஒரு தோழியாக தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் வாணி போஜன் கூறியுள்ளார்.

இதனிடையே, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் என்று கூறி பல முன்னணி ஹீரோக்கள் தன்னை துவக்கத்தில் தங்களது படங்களில் இருந்து நீக்கியுள்ளதாகவும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை போய், நிறைய வாய்ப்புகள் இதுபோல கையிலிருந்து நழுவியுள்ளதாகவும் வாணி போஜன் கூறியுள்ளார். பின்னாளில் அவர்களின் படங்களின் வாய்ப்பு தனக்கு கிடைத்தபோது, தான் ஒருசில படங்களின் வாய்ப்புகளை தட்டிக் கழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நடிப்பிற்கு மரியாதை தரப்படாது தான் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பட வாய்ப்புகளை ஏன் ஏற்க வேண்டும் என்ற எண்ணமே தனக்கு ஏற்பட்டதாகவும் வாணி போஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தான் எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் திரையுலகில் தாக்குப்பிடித்து இருந்தது மிகப்பெரிய விஷயம் என்றும் தன்னுடைய திரை வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகம் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X