Vani Bhojan: "ரொம்ப நெருக்கமா நடிக்கனும்.." எஸ்கேப்பாகிட்டேன்.. உண்மையை உடைத்த வாணி போஜன்
சென்னை : நடிகை வாணி போஜன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அம்மணி கையில் நான்கைந்து படங்கள் உள்ளன.
டிவியில் பிரபல சீரியல் நடிகையாக வலம்வந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன் தற்போது திரைப்படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது செங்களம் என்ற வெப் தொடர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை வாணி போஜன் : நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடித்த தெய்வமகள் தொடரில் சத்யாவாக நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். பல நெருக்கடியான சூழல்களில் தனியாகவும் கணவர் பிரகாஷுடனும் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்தாலும் தெய்வமகள் தொடரில் இவர் நடித்த சத்யா கேரக்டர் வெகு பிரபலமாக அமைந்தது. தற்போது இந்தத் தொடர் பிரபல தொலைக்காட்சி சேனலில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இவர் தற்போது படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் செங்களம் என்ற வெப் தொடர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் ஊர்க்குருவி, பகைவனுக்கும் அருள்வாய், பாயுமொளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் வாணி போஜன். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார் வாணி போஜன்.

சமீபத்தில் இவரது நடிப்பில் செங்களம் என்ற வெப் தொடர் ரிலீசாகியுள்ளது. இந்தத் தொடரில் வாணி போஜன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த வெப் தொடரின் பிரமோஷன்களுக்காக பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார் வாணி போஜன். அப்போது தமிழில் தான் நடிக்காமல் தவறவிட்ட படங்கள் குறித்தும் பேசியுளளார். அப்படி அவர் தவறவிட்ட படங்களில் ஜிவி பிரகாஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த பேச்சுலர் படமும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது பேச்சுலர் படம். இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையில் நெருக்கமான காட்சிகள் இருந்த நிலையில், அந்தக் கேரக்டருக்கு தான் செட் ஆவேனா என்று சந்தேகம் இருந்ததாகவும் அதில் நடித்தால் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்று யோசித்து அந்த கேரக்டரில் நடிக்க தான் மறுப்பு தெரிவித்ததாகவும் வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தில் தான் நடித்திருந்தால், தனக்காக அந்த கேரக்டரில் சில பல மாற்றங்களை இயக்குநர் மாற்றியிருந்திருப்பார் என்றும் ஆனால் அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தனக்காக இந்த மாற்றங்களை செய்வதை தான் விரும்பவில்லை என்றும் வாணி போஜன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்துவந்த வாணி போஜன் தற்போது தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார். இவரது இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











