Vani Bhojan: அது என்னோட லக்கி.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்!

சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை வாணி போஜன். தமிழில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் இவர், யூடியூப் சேனல் ஒன்றில், சுவாரசியமான பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் நடிகை வாணி போஜனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்த தொடரில் தாசில்தாராக, சத்யா என்ற கேரக்டரில் தன்னுடைய கணவன் பிரகாஷ் உள்பட அனைவரையும் அரவணைத்து செல்லும் குடும்ப பாங்கனா கேரக்டரில் நடித்திருந்தார் வாணி போஜன். இந்தத் தொடர் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

Actress vani bhojan Shared a intersting information about her car

நடிகை வாணி போஜன்: இந்தத் தொடரை தொடர்ந்து சில தொடர்களில் நடித்த வாணி போஜன். தெலுங்கில் 2019ம் ஆண்டில் வெளியான மீக்கு மாத்திரமே செப்தா என்ற படத்தின் மூலம் பெரியத் திரையில் அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் ஓ மை கடவுளே என்ற படம் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது. இந்த படத்தில் இவர் இரண்டாம் கதாநாயகியாக வந்தாலும், இவருக்கு சிறப்பாக கதாபாத்திரமாக அடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தின் நீளம் கருதி அந்த காட்சி டெலிட் செய்யப்பட்டு விட்டது. ஆனால், இணையத்தில் வெளியான அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

வெப் தொடர்களில்: இதைத் தொடர்ந்து ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர் ட்ரிப்பிள்ஸ், செங்களம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணைய தொடர்களிலும் நடித்துள்ளார். செங்களம் வெப் தொடரில் அரசியல் வாதியாக தனது கதை பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார். இந்த தொடர் இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.

என்னோட லக்கி: இந்நிலையில் வாணி போஜனிடம், நீங்கள் என்ன கார் வைத்து இருக்கீர்கள் என்று தொகுப்பாளி கேள்வி கேட்க, நான் அந்த விஷயத்தில் மிகவும் கஞ்சம், தேவையில்லாமல் எதற்கும் செலவு செய்ய மாட்டேன், நான் இதுபோன்ற செலவுகளை மிகவும் தவிர்த்து விடுவேன். எது முக்கியம் என்று பார்த்து பார்த்து தான் செலவு செய்வேன் அது என்னுடைய பழக்கம். நான் தெய்வமகளில் நடித்துக்கொண்டு இருந்த போது ஒரு காரை வாங்கினேன். அந்த காரைத்தான் இப்போது வரைக்கும் பயன்படுத்தி வருகிறேன்.

தோணவே இல்ல: அந்தக் காரை எனக்கு மாற்ற தோணவில்லை. காரணம் அந்த கார் எனக்கு மிகவும் லக்கியான கார், ஏனெனில் இதுவரை அந்த காரில் எந்த ஒரு விபத்தும் நடந்தது இல்லை. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டு இருப்பதால், இந்த கார் எனக்கு லக்கி காராக மாறிவிட்டது. எனவே இப்போது வரை எனக்கு கார் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று வாணி போஜன் அந்த பேட்டியில் கூறினார். இப்போது எல்லாம் சினிமாவிற்கு வந்து ஒன்று இரண்டு படங்கள் வந்துவிட்டாலே, ஆடம்பரமாக தெரியவேண்டும் என்பதற்காக சொகுசுகார்களை வாங்குபவர்கள் மத்தியில், வாணி போஜன் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்தும் இன்றும் சாதாரணமாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X