Vani bhojan: ஹாலிவுட் நடிகை எல்லாம் ஓரம் போங்க...பங்கமா போஸ் கொடுத்த வாணி போஜன்!
சென்னை: நடிகை வாணி போஜன் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரிபுதிரி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகமானாலும் தற்போது வெள்ளித்திரையில் ஓரளவுக்கு பெயர் சொல்லும் நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை சைவசம் வைத்திருக்கும் வாணி போஜன் கோலிவுட்டை ஒரு ரவுண்டுகட்டி நடித்து வருகிறார்.

வாணி போஜன்: பிரபலமான சீரியலில் நடித்து சின்னத்திரை நயன்தாரா என்று பெயர் எடுத்த வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து சினிமாவில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். ஆனால் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த கதாபாத்திரமும் அமையவில்லை.

வெப் தொடரில் நடித்தார்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படத்தில் இருந்து வாணி போஜன் நடித்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது. இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, இணையத் தொடரின் குயினாகவே இவர் மாறிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு Lock Up, Malaysia to Amnesia,ட்ரிபிள்ஸ், இரு துருவம் 2, செங்களம் என அடுத்தடுத்து வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

செங்களம்: அண்மையில் ஜீ5 ஓடிடியில் வெளியான செங்களம் இணையத் தொடரில் வாணி போஜன் அரசியல் கட்சியின் தலைவியாக நடித்திருந்தார். இந்த தொடரில் கலையரசன், வாணி போஜன்,டேனியல், விஜி சந்திரசேகர் என பலரும் நடித்துள்ளனர். இத்தொடரில் சூர்யகலாவாக நடித்த வாணி போஜனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்: தற்போது கணிசமான படங்களை கைவசம் வைத்து இருக்கும் வாணிபோஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவில் ஹாலிவுட், பாலிவுட் நாயகிகள் எல்லாம் வெளியில போங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு சும்மா தரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.




Click it and Unblock the Notifications











