லவ் எப்படி வேணாலும் வரும்!'இதுதான் நான் காதலில் விழுந்த கதை..' -முன்னாள் ஹீரோயின் பிளாஷ்பேக்!

By

சென்னை: தான் காதலில் விழுந்த கதையை பிரபல முன்னாள் ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

WOW: Vani Bhojan upcoming Web Series | Women Centric | A. R. Murugadoss

தமிழில், மனோஜ்குமார் இயக்கத்தில் சிவாஜி, சுஜாதா நடித்த படம், 'மண்ணுக்குள் வைரம்'. இந்தப் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை வாணி விஸ்வநாத்.

பிறகு, நல்லவன், பூந்தோட்ட காவல்காரன், தாய்மேல் ஆணை, இது எங்கள் நீதி, மை இந்தியா, இதய திருடன் உட்பட பல படங்களில் நடித்தார்.

தற்காப்பு கலை

தற்காப்பு கலை

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் விஜயசாந்தி என்று புகழப்பட்டவர். சில சீரியல்களிலும் நடித்துள்ளார். மலையாள ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த வாணி விஸ்வநாத் தற்காப்பு கலையை முறைப்படி கற்றவர். இப்போது கேரளாவில் வசித்து வருகிறார்.

திருமணம்

திருமணம்

முன்னாள் ஹீரோயினான இவர், நடிகர் பாபுராஜை காதலித்து 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாபுராஜ், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரமின் ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார். இந்த தம்பதிக்கு அர்ச்சா, அத்ரி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வாணி விஸ்வநாத் அளித்த பேட்டி ஒன்றில், பாபுராஜூடன் காதலில் விழுந்த கதையை தெரிவித்துள்ளார்.

அப்படித்தான் இருப்பார்

அப்படித்தான் இருப்பார்

'ஒரு நாள் ஷூட்டிங் பிரேக். அப்போ பாபுராஜ் வந்திருந்தார். அவருக்கும் எனக்கும் காட்சிகள் இருந்தது. அவரை சினிமாவுல வில்லனாவே பார்த்ததால, ஆளும் அப்படித்தான் இருப்பார்னு நினைச்சுட்டிருந்தேன். அவர் மேல அதிக அபிப்ராயம் ஏதும் எனக்கு இல்லை. நான் ஒரு பாடலை, ஜாலியா பாடிட்டு இருக்கும்போது அவர் என்னைக் கவனிச்சார்.

காதலில் விழுந்தோம்

காதலில் விழுந்தோம்

திடீர்னு இதுக்கு அடுத்தவரி உங்களுக்கு தெரியுமா?ன்னு கேட்டேன். 'அவருக்கு இதெல்லாம் எங்க தெரிய போகுது'ன்னு நான் நினைச்சேன். ஆனா, ஆச்சரியம். அவர் அவ்வளவு அழகா பாடி அசத்திட்டார். இதுக்கு பிறகு அவர்கிட்ட அடிக்கடி பேச ஆரம்பிச்சேன். தொடர்ந்து போன்ல மணிகணக்கா பேச ஆரம்பிச்சோம். நண்பர்கள் ஆனோம். பிறகு காதலில் விழுந்தோம்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X