மீண்டும் டிவிட்டருக்கு வந்த வனிதா.. தஞ்சாவூர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரினார்!
சென்னை: மீண்டும் டிவிட்டருக்கு வந்த நடிகை வனிதா தஞ்சாவூர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குறித்து அவதூறாக பேசினார். பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு அவர் உதவியதால் திட்டி தீர்த்தார்.
மேலும் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டார். இதற்கும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தது.

நயன்தாரா குறித்து பேச்சு
லக்ஷ்மி, கஸ்தூரி என பலரிடமும் மல்லுக்கட்டினார் வனிதா. தொடர்ந்து நயன்தாரா - பிரபுதேவா காதல் குறித்தும் பேசினார் நடிகை வனிதா. இதனால் கடுப்பான நயன்தாராவின் ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்தனர்.

தஞ்சையில் ரெண்டு பொண்டாட்டி
இதனை தொடர்ந்து டிவிட்டரில் அதிகம் நெகட்டிவிட்டி இருப்பதாக கூறிய வனிதா டிவிட்டரில் இருந்து வெளியேறினார். இதனிடையே தஞ்சாவூர் பக்கமெல்லாம் இரண்டு பொண்டாட்டிகள் இருப்பது சாதாரண விஷயம். அங்கெல்லாம் எல்லோர் வீட்டிலும் இரண்டு பொண்டாட்டிகள்தான் உள்ளனர் என ஊடகம் ஒன்றில் பேசினார்.

வனிதா மீது புகார்
அவரது பேச்சால் கடுப்பான தஞ்சாவூர் மக்கள், தங்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் வனிதா மீது தஞ்சாவூர் காவல் நிலையத்திலும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தனர்.

உயர்வாகதான் பேசினேன்
இதனை தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் டிவிட்டருக்கு வந்தார் வனிதா. அப்போது தஞ்சாவூர் மக்கள் குறித்தும் அவர்களின் திருமணம் குறித்தும் பேசியதற்கு மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, நான் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு கணவன் என்று என் தந்தையைப் பற்றி உயர்வாக பேசினேன்.

தவறான புரிதல்..
என் அம்மாவும் தஞ்சையில் இருந்து வந்தவர், ஆனால் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்... நான் தவறாக பேசியிருந்தாலோ அல்லது செய்திருந்தாலோ அதற்கு மன்னிப்பு கேட்பதை நான் ஒருபோதும் தவறாக உணர மாட்டேன். நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம், ஆனால் நான் அவமதிக்கவில்லை.

மிகவும் வருந்துகிறேன்
தஞ்சையில் இருந்து வந்த எனது சக சகோதர சகோதரிகளே... தயவுசெய்து என் கோபத்தையும் குரலையும் இன்னொரு பிரச்சினையில் உங்களை அவமதித்ததாக தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.. உங்கள் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய எதையும் நான் தற்செயலாக செய்திருந்தால் மிகவும் வருந்துகிறேன்.

மன்னிக்கவும்..
என்றென்றும் தலை வணங்குகிறேன் என் தஞ்சை மண்ணிற்கு. தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் தம்பிஸ் அன்ட் தங்கச்சிஸ்... என பதிவிட்டு தஞ்சை பெருவுடையார் கோவிலின் இமேஜையும் ஷேர் செய்துள்ளார் வனிதா.


Click it and Unblock the Notifications











