வாவ்.. கமலுக்காக ஸ்பெஷலாய் பிறந்தநாள் கேக் செய்து கொடுத்த வனிதா.. செம டேலன்ட் போங்க!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வனிதா விஜயக்குமார் அவருக்கென ஸ்பெஷலாக செய்திருக்கும் கேக் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி ரசிகர்களை கேட்டிக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

இருந்த போதும் கமலின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாட தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். காமன் டிபி வெளியிட்டு தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

வாழ்த்து

வாழ்த்து

கமலின் காமன் டிபியை திரை பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தனர். கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வாகனங்களில் ஊர்வலம்

வாகனங்களில் ஊர்வலம்

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டனர். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு சென்ற அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர் ரசிகர்கள்.

திருவிழா போல்

திருவிழா போல்

மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல இடங்களில் ரசிகர்கள் மேளதாள முழக்கத்துடன் அசத்தல் வரவேற்பு கொடுத்தனர். கமலின் பிறந்த நாளை திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்களும் மக்கள் நீதி மய்யத்தினரும்.

வனிதா கேக்

வனிதா கேக்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலையிலேயே தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகை வனிதா. தற்போது நடிகர் கமல்ஹாசனுக்காக ஸ்பெஷலாக பிறந்தநாள் கேக்கை தயாரித்துள்ளார். வனிதா தயாரித்துள்ள அந்த கேக்கில் நம்மவர் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஃபிரெஷ்லி பேக்டு ஃபார் யூ

ஃபிரெஷ்லி பேக்டு ஃபார் யூ

மேலும் மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்தையும் அந்த கேக்கில் இணைத்திருக்கிறார் வனிதா. தான் தயாரித்துள்ள கேக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, ஃபிரெஷ்லி பேக்டு ஃபார் யூ என்று கேப்ஷன் கொடுத்து கமலின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார்.

வறுபட்ட வனிதா

வறுபட்ட வனிதா

பலரும் உங்களுக்கு செம டேலன்ட் வனிதா அக்கா என பாராட்டி வருகின்றார். நடிகை வனிதா கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கமலிடம் சிக்கி பல முறை வறுப்பட்டார்.

வாய்ப்பு கேட்ட வனிதா

வாய்ப்பு கேட்ட வனிதா

இருந்த போதும் அந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியில் வனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார் கமல். அப்போது பர்த்டே பேபிக்கு, கிஃப்ட் வேண்டும் என்று கமலின் படத்தில் நடிக்க நேரடியாக சான்ஸ் கேட்டார் வனிதா. தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து விமர்சன வீடியோ வெளியிட்டு வரும் வனிதா, கமல் வாரம் முழுக்க நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X