நான் திமிர் பிடித்தவள்தான்... ஏத்துக்காதது உங்க இஷ்டம்... யாரு சொல்லியிருக்கான்னு பாருங்க!
சென்னை : பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் நடிகை வனிதா.
தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக தன்னுடைய வெளிநடப்பிற்கு காரணம் கூறினார்.
நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.

நடிகை வனிதா விஜய்குமார்
நடிகை வனிதா விஜய்குமார் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் ஜோடிகள் என விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

போல்டான கேரக்டர்
எப்போதும் தான் நினைத்ததை போல்டாக கூறுவது இவரது வழக்கம். இதனால் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சக போட்டியாளர்களிடம் இவர் எப்போதுமே முரண்பட்டே காணப்படுவார். குறிப்பாக பிக்பாஸ் மற்றும் தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் சக போட்டியாளர்களிடம் தொடர்ந்து சண்டை செய்தும் கோபத்தை வெளிப்படுத்தியும் காணப்பட்டார்.

மூன்றாவது திருமணம்
இவர் மூன்றாவது திருமணம் செய்தபோது பலரும் விமர்சனங்களை எழுப்பினர். அப்போது தான் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்வேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை பிரிந்து, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் மற்றும் வசந்தபாலனின் இயக்கத்தில் புதிய படம் என்று தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது 25 நாட்களை கடந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் சிறப்பான வகையில் கலந்து கொண்டார்.

பிபி அல்டிமேட்டிலிருந்து வெளியேற்றம்
24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி தனக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

வெளியேற காரணம்?
முன்னதாக நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் கிளம்பின. இதுவே இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என்றும் கூறப்பட்டது. இதற்கு தனது பாணியில் பதிலடி கொடுத்தார் வனிதா. இந்நிலையில் தனது மகளுடன் தான் இருக்கும் புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

திமிர் பிடித்தவள் தான்
அதில் தன்னை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். தன்னை திமிர் பிடித்தவள், அகங்காரம் கொண்டவள் என்னை சிலர் நினைப்பதாகவும் தான் அப்படித்தான் என்றும் அவர் கூறியுள்ளார். தான் அதற்கு தகுதியானவள் என்றும் அதை ஏற்பதும் ஏற்காததும் மற்றவர்கள் பிரச்சினை என்றும் கூறியுள்ளார்.
Recommended Video

விமர்சனங்கள் குறித்து கவலையில்லை
மேலும் தனக்கு தான் தான் முக்கியம் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தான் மற்றவர்கள் விமர்சனங்கள் குறித்து கவலை கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் போல்டான செயல்பாடுகளை தன்னுடைய நடவடிக்கைகளில் மட்டுமின்றி வார்த்தைகளிலும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் வனிதா.


Click it and Unblock the Notifications











