twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்னிப்பு கேட்டு யூடியூப் சேனலை மூடணும்.. வனிதா வைத்த கோரிக்கை.. வழக்கு வேறு ஸ்டேஷனுக்கு மாற்றம்!

    By
    |

    சென்னை: நடிகை வனிதா போரூர் ஸ்டேஷனில் கொடுத்த புகார் வேறு ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    Recommended Video

    Vanitha Vijaykumar முதல் சாந்தமான நேர்காணல்

    நடிகை வனிதா விஜயகுமார் அடிக்கடி பரபரப்பில் இருப்பவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பரபரப்பானார்.

    நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். பின்னர், 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

    மூன்றாவது திருமணம்

    மூன்றாவது திருமணம்

    உடனடியாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பின்னர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் 2 வது திருமணம் செய்துகொண்டதாக புகார் கூறியிருந்தார்.

    அவதூறாகப் பேசினார்

    அவதூறாகப் பேசினார்

    இது சமூக வலைதளத்தில் பரபரப்பானது. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்தனர். சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன், யூடியூப் பிரபலம் சூரியா தேவி ஆகியோர் வனிதாவின் திருமணம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சூரியா தேவி மீது அவதூறாகப் பேசினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை வனிதா, போரூர் காவல் நிலையத்தில், 7 ஆம் தேதி புகார் அளித்தார்.

    மகளிர் காவல் நிலையம்

    மகளிர் காவல் நிலையம்

    அந்தப் பெண் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாகவும் அவருக்கு பலருடன் தொடர்பு இருக்கிறது என்றும் பரபரப்பு புகார் தெரிவித்தார். இந்நிலையில், தன்னை பற்றி அவதுாறாக பேசிய நடிகை வனிதா மீது சூர்யா தேவி, வடபழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இரண்டு புகார்களும் பெண்கள் சம்பந்தப்பட்டது என்பதால், உயர் அதிகாரிகள் உத்தரவுபடி, இந்த புகார்கள் வடபழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    தற்போது, இரண்டு புகார்களையும், வடபழநி மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா அளித்த பேட்டியில், சூர்யா தேவி மன்னிப்பு கேட்பதுடன், அந்த யு டியூப் சேனலை நிறுத்திவிட வேண்டும் என்றும் அதை செய்தால் இந்தப் பிரச்னையை முடித்துக் கொள்ளலாம் என தெரிவித்தேன். ஆனால், நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்தப் பெண் எதிர்பார்க்கிறார். ஒருவரை தவறாகப் பேசி பணம் சம்பாதிப்பது என்பது தவறான கலாசாரம் என்றார்.

    English summary
    Actress Vanitha case transferred to Vadapalani women's police station.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X